பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 iš ஆராய்ச்சிக் கட்டுரைகள்

எழுத்து இருபதாம் நூற்ருண்டுத் தமிழ் உரை நடையில் கட்டுரைக் கலைக்குப் பெருவாழ்வு நல்கியது:" இதழ்களில் வரும் எளிய தொடர்நிலைக் கதைகளையே சுவையோடு படித்துவந்த வாசகர்களே, இனிய இலக் கிய கட்டுரைகளையும் சுவையோடு படித்துப் பயன் பெறத் துரண்டியது; புகழ் பெற்ற கிழமை இதழ் களும் பேராசிரியர் இலக்கியக் கட்டுரைகளைத் தாங்கி வருதல் பெருமைக்குரியது-படிப்பார் தொகையைப் பெருக்கும் வாய்ப்பைத் தருவது என்று கருதச் செய்தது; எளிய தமிழ்ப் படிப்புடையவர்களும் இலக்கிய ஆர்வமும் அறிவும் பெற வழி கோலியது; மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் மக்கள் மன்றத்தில் வேரூன்றச் செய்தது; சீர்குவேந்த ஊர்ப்பெயர்களைச் சீர்பெறச் செய்தது. ஊர்ப் பெயர்கள் ஆராய்ச்சியில் அறிவாளர் சிந்தனையைத் திருப்பியது; தமிழ்ப்பெருங்காவியங்களின் பண்பை ஒரு சிறிது தமிழ் கற்றவரும் உணர்ந்து போற் நச் செய்தது; தக்க இலக்கியச் சொற்களையும் சொற் ருெடர்களையும் மணிமிடை பவளம்போலக் கட்டுரைகளில் எடுத்தாண்டமையால், படிப்பவர்களின் தமிழ் உரைத் திறத்தை உயர்த்தியது; தமிழக எல்லைகள் தமிழகத் தலைநகர் பற்றித் தமிழ் மக்கள் உணர்ச்சியும் உறுதியும் கொள்ளச் செய்தது; தனித்தமிழின் இனிமையையும் ஏற்றத்தையும் மெய்ப்பித்தது; ஆனந்தரங்கம் பிள்ளே நாட்குறிப்புப் போன்ற அரிய நூல்களின் பெருமையை நாடறியச் செய்தது; கால்டுவெல் முதலான கிறித்தவ தமிழ்த் தொண்டர்களின் பெருந்தொண்டைத் தமிழகம் உணர்ந்து போற்ற வழிவகுத்தது; தமிழ்ச்சொற்கள் பலவற்றின் சிறப்பையும் வரலாற்றையும் அறிஞர்

89. பார்க்க கட்டுரைக் கலே-த, சஞ்சீவிAnna is of Orientai Research, Vol. XV11--1960–61, Part !,