பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22莎 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

முதலாவது எது? என்று கேட்டால், நான் அதில் முதலா வது, இரண்டாவது, மூன்ருவது- ஏன் -எல்லாமே அடக்கமுடைமைதான் என்று மறுமொழி பகர்வேன்." என்றும், சான்ருேர்கள் கூறிய மொழிகளே நினைவுக்கு வரும்,

ஒழுக்கம்:

இங்ங்ணம் அடக்கமே உருவாய பேராசிரியர் அவர்கள் எழுத்திலும் பேச்சிலும் செயலிலும் எண்ணத் திலும் ஊடுருவியுள்ள ஒழுக்க உணர்வு, நமது வாழ்த் திற்கும் வணக்கத்திற்கும் உரியது. எவ்வளவு எளிமை யாகவும் இனிமையாகவும் பேசினலும், எள்ளளவும் தரக் குறைவுடைய சொற்களையோ கருத்தையோ பேராசிரியர் அவர்களிடம் எப்போதும் எதிர்பார்க்க முடியாது. இவ் வுண்மையை நினைக்கும்போதெல்லாம்,

"ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்."

என்னும் திருக்குறளே நம் நினைவுக்கு வரும். பேராசிரியர் அவர்கள் சொற்களில் காணப்படும் இப்பண்பு அவர்கள் வாழ்க்கையின் எல்லாக் கூறுபாடுகளிலும் இலங்கக் காணலாம். பெரிய படிப்பும் பெரிய பதவியும் உடையவர் ஒழுக்கக் குறை உடையவர்களாய் இருப்பார்களாயின், அதல்ை விளையக்கூடிய கேடுகள் நம்மால் கற்பனை செய் தற்கும் இயலாதன. அந்நிலையில், பேராசிரியர் அவர்கள்

100. 'Should you ask me, 'what is the first thingin religion?

shoud repły, the first, second, and third therein— nay, ass—is humility'—Augustine.

(All from the The New Dictionary of thoughts)

101. திருக்குறள், 135.