பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔慧

முதலாகப் பலரும், வடமொழி இலக்கியத்தின் பெருமை யையே விரித்துக் கூறுவர். அவ்விந்திய இலக்கியங்களின் வரலாற்றிலே, தமிழ் இலக்கியத்தைப் பற்றியோ, திரா விட நாகரிகத்தைப் பற்றியோ, ஒரு சொல்லேனும், ஒரு குறிப்பேனும், ஒரு கருத்தேனும் காணக்கிடையா. இந்தி யப் பண்பு, இந்திய நாகரிகம், இந்தியக் க%லகள், இந்திய மொழிகள் என அவர் மொழிவனவெல்லாம், திராவிடப் பண்பு, திராவிட நாகரிகம், திராவிடக் கலைகள், திரா விட மொழிகள் இவற்றையே அடிப்படையாகக் கொண் டவை. ஆயினும், பல்லாண்டுகளாக நடுவுநிலை கடந்தோர் பலர், இவ்வுண்மையை மறைத்தும், திரித்தும், ஒழித்தும் நூல்கள் யாத்தமையின், இன்று இவ்வுண்மையை எடுத்துக் கூறுவதும், மக்கள் மனத்தில் ஐயம் விளைப்ப தாக இருக்கின்றது. அங்ங்னம் எடுத்துக் கூறுதற்கும், பெரிதும் மனத்துணிவு வேண்டற்பாலதாயிற்று. தமிழ ராகிய நாமும், நமது இந்திய மொழிகளிலேனும், நம் தமிழைப் பற்றிய உண்மைகளே இதுகாறும் கூறினேம் அல்லேம்.

"செய்யுடை யொருவன் சொலமாட் டாமையால்

பொய்போ லும்மே பொய்போ லும்மே."

'பொய்யுடை கொருவன் சொல்வன் கைவிஞல்

மெய்போ லுக்மே மெய்போ லும்மே."

ஆதலின், உலகம் நம்மை உணராமலும், நாமே தம்மை யுணராமலும், பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழர் எனக்கொண்டு இங்கு உயிர் வாழ்ந்து வந்துள்ளோம் :

$ தவத்திரு-டாக்டர் தனிநாயக அடிகளார்: 'தமிழ்த்

தூது (1962, பக்.28-29.).