பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து 17

பெரும்பல் யானைக் குட்டுவன் வரம்பில் தானே பரவா ஆங்கே." ' குலையிழி பறியாச் சாபத்து வயவர்

அம்புகளை வறியாத் துங்குதுளங் கிருக்கை இடாஅ வேனி யியலறைக் குருசில்.’ பழந்தமிழ் நாட்டில் நாளும் போர்ப்பறை முழங்கிய வண்ணம் இருந்தது. முடிகெழு வேந்தர் தம்முள் ஒரு சிறிதும் ஒற்றுமைப்பண்பு இலராய், ஒருவரை ஒருவர் எதிர்த்து அழிப்பதற்குரிய சமயம் பார்த்து வாழ்ந்து வந்தனர். இதல்ை சேர சோழ பாண்டியரிடையே ஒயாது போர் நிகழ்ந்தது. சேரர் குடியில் தோன்றிய பல்யானைச் செல்கெழு குட்டுவன் அறிவிலும் ஆற்றலிலும் தன்னே ரில்லாத் தலைவனுய் விளங்கிய தகைமை கண்டு, ஏனைய இருபெருவேந்தர் நெஞ்சிலும் பொருமைத்திக் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. வேளிர் சிலரைத் துணையாகக் கொண்டு அவ்விருபெரு வேந்தரும் குட்டுவனை எதிர்த்த னர்; வஞ்சினம் கூறினர். குட்டுவன் அவர்கள் படைச் செருக்கையும், மனச் செருக்கையும் அழித்தான். அவ ருக்கு அரணுக அமைந்திருந்த கடல் அரனேயும் காட்ட ரணையும் நொறுக்கி எறிந்தான். குட்டுவனது பேராற்றலை அறிந்த பகை மன்னர் அவன் வேலுக்கு அஞ்சி வாழலா யினர். இச்செய்தியினே மூன் மும் பத்தின் இறுதிப் பாடல் நமக்கு எடுத்துரைக்கின்றது.

' பணகெழு வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து கடலவும் காட்டவும் அரண்வலியார் கடுங்க”

(பதிற்றுப்பத்து 30, 30-31.) இவ்வாறு வேந்தரும் வேளிரும் அஞ்சி நடுங்கும் ஆற்றலை உடையவனுயிருந்த சேரவேந்தன் போர்முனைக் குப் புறப்படுங்கால் முரகறை கடவுளுக்குப் பலியிட்டு

ஆ-2