பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து 荔

பாலைக் கெளதமஞர் எண்ணிய எண்ணம் திண்மை யுடையது. எனவே, அது வீணுகவில்லை. போர்! போர்' என்று தினவெடுத்த தோள்களையுடைய வீர மறவர் களுக்குத் தலைமை தாங்கி, ஈரநெஞ்சம் சிறிதுமின்றி எதிரி நாடுகளை உழக்கிய குட்டுவன் செவிகளில், தண்டமிழ்ச் சான்ருேராகிய பாலைக் கெளதமனர் பக்குவமாகக் கூறிவந்த மொழிகள் தக்க பயன் அளித்தன. வீரருள் வீரனுய் வாழ்க்கையைத் தொடங்கிய குட்டுவன், ஞானிகளுள் ஞானியாய்த் தன் வாழ்க்கையை முடிக்க உறுதி பூண்டான். கவிங்கப்போரைக் கண்டு அசோகப் பேரரசரின் நெஞ்சம் அருள் நெறிப்பட்டது போன்று, குட்டுவனது நெஞ்சம் கருணைக் கடலாயிற்று. பல்யானைச் செல்கெழு குட்டுவன், பிறக்கும் பொழுதே இமய வரம்பன் தம்பி’ என்ற பெரும்புகழொடு பிறந்தான்; தன் தோள் வலியாலும் வாள் வலியாலும் தமிழகத்தின் நிகரில்லாத் தலைவனுய்த் திகழ்ந்தான்; நால்வகைப் படைகளையும் நன்கு பேணி வைத்திருந்தான். உம்பற் காட்டைத் தன் உடைமையாக்கினன். அகப்பா என்னும் பேரரணை எறிந்து பகல் தீ வேட்டான். கொங்கு நாட் டையும் பூழி நாட்டையும் வென்ருன். கடுங்கண் மறவராகிய மழவரைத் தன் கருத்துவழி நடப்போர் ஆக்கிக்கொண்டான். பூழியர் கோவே' என்றும், மழவர் மெய்ம்மறை என்றும், ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த வேல்கெழுதானே வெருவரு தோன்றல் என்றும் புலவர் பாடும் புகழ் பெற்ருன்; இவ்வாறு தான் அடைந்த தன் வெற்றிவாழ்வை வியனுலகமெல்லாம் கண்டு போற்றி வியக்குமாறு செயற்கருஞ் செயல் ஒன்று செய்தான். தன் பல்யானைப் பெரும்படையைக்

1. பதிற்றுப்பத்து, 22 : 1.7 -20 2. பதிற்றுப்பத்து, 21; 23; 24, 22 15,