பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జి ஆராய்ச்சிக் கட்டுரைகள்

குணகடலுக்கும் குடகடலுக்கும் ஒரே காலத்தில் அனுப்பி, அவ்விரு கடல்நீரும் ஒரு பகலிலேயே வருமாறு செய்தான்; அவ்வாறு கொண்டுவரப்பட்ட இருகடல் நீரிலும் படிந்து ஆடிப் பெருமையுற்றன். இவ்வாறு குட்டுவன் பெற்ற பெருமையின,

  • உருகெழு மரபின் அயிரை மண்ணி

இருகடல் நீரும் ஆடினேன்.”

(சிலம்பு 23:145-146)

என்று இளங்கோ அடிகள் பெருமிதத்துடன் பாராட்டு கின்றர்.

இங்ஙனம் போரால் விளைந்த புகழின் எல்லையைப் பெருவிழாவாய்க் கொண்டாடிய குட்டுவன். தன் நாட்டு அயிரைமலையில் கோயில் கொண்டுள்ள கொற்றவைத் தெய்வத்தைத் தன் குலத்தார் செய்துவரும் வழிபாடு வழுவாத வகையில் வழிபட்டு மகிழ்ந்தான். இறுதியாக இருபத்தைந்து ஆண்டுகள் போர்மலிந்த-புகழ்மலிந்தஆட்சி நடத்திய குட்டுவன், பிறவாப் பெருநெறி காணப் பெருவிழைவு கொண்டான். மண்ணை அடக்கி வாழும் வாழ்வினும், மனத்தை அடக்கி வாழும் வாழ்வே:சிறந்த தேனத் தெளிந்தான்; மண்ணரசாள்வதிலும் விண்ணர சாள்வதே மேலென விரும்பினன். உயிர்களை வதைத்து அழித்து ஒழித்து நாசமாக்குவதிலும் உற்றநோய் தோன்று உயிர்க்கு உறுகண் செய்யாது த்வவாழ்வினை மேற்கோள்வதே சாலச் சிறந்ததென உணர்ந்தான்; தன் குலத்தில் தனக்கு முதியாரை மதியோடு ஒத்த தன் தண்ணளியால் தழி இக்கொண்டு, அவர்க்குத் தன் நாட் டைப் பகுத்துக் கொடுத்தான், ஒங்கு புகழும் உயர்ந்த கேள்வியும் ஒருங்கே படைத்திருந்த தன் ஆசிரியராகிய தெடும்பாரதாயனர் காட்டிய ஞானநெறியே செல்ல