பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షః ஆராய்ச்சிக் கட்டுரைகள்

ఖీ, నే

கோட்டான்கள் எனப்படும் கூகைகளின் கண்கள்

பிதுங்கின போன்றிருக்கும். இவை கூவும் ஒலி கொடிய

கண்களையுடைய பேய்மகள் கூத்தாடத் துணை புரியும்.

இதடு என்பது சிள்விடென்னும் ஒரு வகை வண்டு, இல் இல்லாமல் உலர்ந்த தலையினையுடைய உன்னமரத் தின் சிறு சிறு கிளைகளில் பொருந்தியிருந்து இச்சிதடுகள் செய்யும் ஒசை வண்டின் ஓசைபோல இனிதாய் இராது.”

கொக்கு :

நீர் நிறைந்த இடங்களில் வாழும் கொக்கின் பார்வை கூர்மையானது. சேய்மையிலிருந்தே நுனித்து நோக்கும் ஆற்றலுடைய கொக்குகளால் விரைந்து குத்தப்படும் கடுமையினின்றும் மீன்கள் தப்புவது அருமை. எனவே, அவை கொக்குகளின் பரிவேட்புக்குப் பெரிதும் அஞ்சும்.

極評鑫額 :

நீர் இடையருமல் நிற்கும் இடங்களில் தமக்கு வேண்டிய இரையை நிரம்பப் பெறுதலின், அவ்விடங் களில் விரும்பி வாழும் நாரைகள் பெரிய கால்களே உடையன; வளைந்து தலை சாய்ந்து கிடக்கும் நெல்வய விடத்தே அயிரை முதலிய கொழுத்த மீன்களை உண்டு மகிழும். கானற் சோலைகளில் மீன்வேட்டமாடிய குருகு கள் வெள்ளிய பூங்கொத்துக்களை உடைய புன்னேக் கிளேகளில் தங்கும். நாரை, செவ்வரி, குருகு, கொக்கு

1. பதிற்றுப்பத்து, 22 : 36, تمامی -------ج 2. பதிற்றுப்பத்து, 23 : 2. 3. பதிற்றுப்பத்து, 21:27 4. பதிற்றுப்பத்து, 29 : 4.