பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து 5】

-கடவுள் உள்ளம்-நம்மை ஆட்கொண்டு விடுகிறது: ஆம்; அவர் வாழ்த்திய வாழ்த்து விளுகிவிடவில்லை. அவரும் அவர் உள்ளத்தைத் திறைகொண்ட மன்னனும் அவன் பெருந்தேவியும் இன்றும்-பாட்டுலகில்-புகழ் வடிவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிரு.ர்கள். அவ் வண்ணமே தமிழோடு தமிழாய் அவர்கள் புகழுரு என்றும் நிலைத்திருக்கும். பாலைக்கெளதமனர் சேரனே இன்ப வாழ்வு வாழும்படி வாழ்த்திய வாழ்த்து, உலகில் உள்ள ஒவ்வோர் உயிரையும் அவ்வாறே வாழுமாறு வாழ்த்திய வாழ்த்தொலிபோல இன்றும் ந்ம் செவிகளில் எதிரொலிக் கின்றது. அதுதான் நிறைமொழி மாந்தர் மறைநிகர் மொழியின் ஆற்றல் போலும்!

17. உயர்ந்த உண்மை

உலகமெல்லாம் வாழ வேண்டும் என்ற பெருங் குறிக் கோளுடன் உலக உயிர்களுக்கு எல்லாம் உயிராய்தாயாய்-தெய்வமாய் விளங்கிய அரசனை வாழ்த்திய பாலக்கெளதமஞர், மன்பதை உய்யக் கூறிச்சென்ற மணிமொழிகள் பலவாகும். அவற்றுள் இன்றும் நமக்குப் பெரிதும் பயன்படக் கூடிய சிறந்த ஒர் உண்மையில் மட்டும் இப்பொழுது சிந்தனையைச் செலுத்துவோம்.

இன்று நாம் வாழும் யுகம் அரசியல் யுகம்-அரசி பல் கலவாத எதுவும் விளங்காமற் போகும் காலம் இது. இத்தகைய யுகத்தில் ஒரு நாட்டின் அரசியல் பழுதின்றி உலகம் போற்றத்தக்க வகையில் நடைபெறுவதற்குரிய ஒரு நல்லறிவுரையை-ஒப்பிலாத மணிமொழியை - வழங்கி நிற்கின்றன. மூன்ரும்பத்தின் இரண்டாம் பாட லின் முதல் நான்கு அடிகள். 'கையி கந்த சினமும், கையி கந்த காமமும், கையிகந்த கண்ணுேட்டமும், பகைவர்க்கு