உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாராவுயிர்த்தது. உாசு என்றார். நாயகமவர்கள் அைைர நோக்கி "உமக்கு எதன் மீது விருப்பம்? ” எனக் கேட்டார்கள். உடனே அவர் மிர்ந்து ஆகாயத்தைப் பார்த்தார்; அப்போது, கொழுத் துப் பருத்த தாராக்கள் ஐந்து ஆகாயத்திற் பறந்து போய்க்கொண்டிருந்தன. அவற்றை அவர் நாயகமவாக ளுக்குக் காட்டி "இவ்வைந்து தாராக்களுள் ஒன்றை தின்ன விரும்புகின்றேன். அவ்வொரு தாராவைச் சுட்டு, அதனோடு இரண்டு ரொட்டிகளும், குளிர்ந்த நீரும் தரல் வேண்டும்" என்று சொன்னார். நாபகமலர்கள் ஆகாயத்திற் பறந்துபோகின்ற ஐந் து தாராக்களுள் ஒரு தாராவை விளித்து “ஏ, தாரா! நீ அங்கேயே அறுத்துச் சுத்தமாக்கிச் சுடப்பட்டு இங்கு இ றங்கி, இவருடைய விருப்பத்தை நிறைவேற்று” எனக் கட்டளை யிட்டார்கள். இக்கட்டளை பிறந்தவுடனே அவ் வைத்து தாராக்களுள் ஒன்று அங்கேயே பக்குவமாகச் சுடப்பட்டு, கொழுப்புமணங் கமழ மிக்க சுவையோடு. இ றங்கிற்று, பின் நாயகமவர்கள் தங்கள் கைகால் இரண்டு கற்களையெடுத்து அச் சுட்ட தாராக்கறியுடன் அவர்முன் வைத்தார்கள். அவ்விரு கற்களும் இவ்வுலகத்து இல்லாத சவையும் மணமும் உள்ள இரண்டுரொட்டிகளா யிருந்த ன. பின்னும் நாயகமவர்கள் தங்கள் வலக்கரத்தை ஆகா யத்தில் நீட்டிக் குளிர்ச்சியான சுத்தநீர் நிரம்பிய கரசும் ஒன்றை யெடுத்து அவர் முன்னே வைத்து "சிறப்பான வரே, அவற்றைத் தின்று, இந்நீரைப் பருகுவீராக 1 என உத்தரவு செய்தார்கள். அந்தமனிதர் நாயகமவர்கள் க செய்தவுடன் சுட்ட தாராவின் என்புதவிர மருது இறைச்சி முமுமையை, யும், அவ்விரண்டு ரொட்டியையும் வயிறு நிரம்ப தின்று அக்சுரக நீர் அவ்வளவையும் குடித்துவிட்டு எழுந்து, முன் வந்தவாறே ஆகாயமார்க்கமாய்ப் பறவைபோலப் பறந்து போய்விட்டார்.