ஆரிபுநாயக வசனம். ரோடு பயணப்பட்டார்கள், இவர்கள் பயணப்பட்டவு டன் சுல்தான் முகம்மீது தமக்குப் பிரதியாய் ராச்சியபரி பாலனம் கடத்துதற்கு உரித்தாளர் ஒருவசை நியமித்து விட்டுப் பிரயாணமானார். அவரோடு அவர் பரிவாரத்தார். எண்ணிறந்த பேர்கள் புறப்பட்டார்கள். பெருந்தொ கையான திரவியம் அமைந்த பொக்கிஷங்களும், திரளா ன குதிரைகளும், கணக்கற்ற வெள்ளாட்டிகளும், கடக் கொண்டு வரப்பட்டன. சுல்தான் முகம்மது இவ்வாறாகப் பிரயாணமாய்த் தம் சேனைமுதலான பரிவாசன்கள் படைசூழ மாமி நாச்சி யத்தைக்கடந்து, தென்றிசைநோக்கிப் பலநாள் நடந்து, இருக்கு தேசத்தில் ஓந்துசேர்ந்தார். நாயகமவர்களின் திரு வடித் தேட்டம் அன்றி வேறொன்றும் அவர் இருதயந்து இல்லாமையால் அங்கங்கே தங்கிக் காலத்தை விருதாவிற் கழிக்காது நடந்து பதாயிகு நகரத்தை நெருங்கி, அதன் பக்கத்து உள்ள வனத்தில்வந்து சேர்ந்தார். சேர்ந்தும், நகரத்தை நோக்கிச் சேனை நடந்துகொண்டிருந்தது. அவர் சேனைவந்து சேர்ந்த அன்றைத்தினம் சைகு அ லாவுத்தீன் வாஸ்தி என்னும் பெரியோர் அவ்வளத்து நின்று வேட்டையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்களுக்குப் பெருந்திரளான சேனையொன்று வருவது தெரிந்தது தெரியவே, அவர்கள் வேட்டையாடுவதை நி றுத்தி அச் சேனையை முன்னோக்கிவந்து, இச்சேனையோடு வருபவர் பார் என விசாரித்தார்கள். றாமுடைய அமீர் ஹா ஜீறஜபு சுல்தான் முகம்மது தம்மைச்சேர்ந்தார் • பலருடன் சுல்தானுல் ஆரிபீன் நாயகமவர்களிடத்து முரீதாய் பைஅத் துக் கொடுப்பதற்காக வருகின்றார் என்.று செய்தி தெரித் தது. சைகு அலாவுத்தீன் இதனை அறிந்துகொண்டு அங் கேயே நின்றார்கள்.
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/251
Appearance