33 - ம் அத்தியாயம் உம்முல் கறாமாத்து, (இது, சுல்தானுல் ஆரியின் சையிது அகுமதுல் கபீறு றலி யல்லாகு அள்த அவர்களா, உம்முல் கறுமாத்து என்று ஒரு பெண் நியமிக்கப்பட்ட வரலாற்றைச் சொல்கின்றது. இதற்கு றவி:- சை கு இபுறஹீமுல் அதறபு) சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதல்கபீறு றலியல் லாகு அன்கு அவர்கள் பதாயிகு நகரத்தில் இணையில்லாத மகத்துவத்துடன் வாழ்ந்திருக்கும் காலத்தில் ஒருநாள், தங்கள் ஆசனத்தின்மீது வீற்றிருந்து சமூகத்தே கூடியி ருக்கும் பெரியோர்களுக்கு அல்லாகுத் தஆலா வின் முஹப் பத்தை யும் மஅரியத்தை யும்பற்றி விளக்கமாகப் பேசிக் கொண்டும் அவர்களுக்கு அறிவு கற்பித்துக்கொண்டும் இருந்தார்கள். அப்போது பகுதாது நகரத்திலிருந்து ஒரு எளியவர் நாயகமவர்கள் சமுகத்தில் வந்து அடிபணிந்து ஸலாம் சொல்லி நின்றார் நாயகமவர்கள் அவர்க்குப் பிரதி ஸலாம் பகர்ந்தார்கள். பின்பு அவ்வெளியவர் நாயகமவர்க ளை நோக்கி யோசையித், தமியேன் மிக்க எளியவன். உண் ணுதற்குக் கீழ்த்தரமான ஆகாரமும், உடுத்துதற்குப் பழ மையான ஆடையும் எனக்குக் கிடைப்பது இன்றி வருந் துகின்றேன். ஆதலால், தமியேனுக்குத் திரவியம் உண் டாய் நாடியதை அநுபவித்துச் சுகத்தோடு இருக்கும்படி அல்லாகுத் தஆலா இடத்துக்கேட்டு அருளவேண்டும்" என் று முறையிட்டார். தம்முடைய இல்லாமைதீரப் பொருள்உண்டாய் வாழ் வுபெறவேண்டும் என்று அவர் கேட்டதற்கு நாயகமவர்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/259
Appearance