பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தமிழர் பண்பாடு


எருவாகக் குவிக்கப்பட்டிருக்கும் தொழுவத்தில் கிடந்து இனிதே உறங்கத்தக்க வளம் நிறைந்த வாழ்தற்கினிய மாளிகையையும் என்னையும் இங்கே விடுத்து தன்னுடன் வரும் காளை போலும் இளையோன் கூறும் , அளவு கடந்த பொய்யுரைகளில் மயங்கி, நெடுந்தொலைவில் உள்ள அவன் ஊரை அடைய விரும்பி, பசியெடுத்தபோது, உண்ணுவதற்கு வேறு உண்பொருள் கிடைக்காமையால், வழியிடையில் உள்ள நெல்லிமரச் சோலையில் உதிர்ந்து கிடக்கும் முற்றித் தேர்ந்த காய்களைத் தின்று, நீர் வறண்டு கிடக்கும் சுனையில் ஒரு சிறிதே தேங்கி நிற்கும் நீரைக் குடித்து செல்லும், நெய்தல் மலர் போலும் மையுண்ட கண்களை உடைய , என் மகளை, பனங்குருத்துக்களைப் பிளந்து பதனிடுவான் வேண்டிப் போட்டுப் பரப்பும், மாலைப் போதில் விரிந்த நிலவெளியிலே சென்று, தேடிப் பின் சென்று காணும் படியாகச் செய்த, இதற்கு முன்னரே, என்னைப் பெரிய கரிய தாழியில் இட்டு அடக்கம் செய்வதற்கு ஏற்ப என் உயிரைக் கொண்டு செல்லாத அந்தக் கூற்றுவன் தன் வலி அழிந்து, அத்தாழியல் இட்டுக் கவிக்குமாறு இறந்து போகக் கடவனாக'’.

“இரும்புனிற்று எருமைப் பெருஞ்செவிக் குழவி,
பைந்தாது எருவின் வைகுதுயில் மடியும்
செழுந்தண் மனையோடு எம் இவண் ஒழியச்
செல் பெரும் காளை பொய் மருண்டு, சேய்நாட்டுச்
சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர்
வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று
வீசுனைச் சிறுநீர் குடியினள் கழிந்த,
குவளை உண்கண் என் மகளோ ரன்ன
செய்போழ் வெட்டிப் பெய்த லாய
மாலைவிரி நிலவில் பெயர்ப்பறம் காண்டற்கு
மாயிரும் தாழி கவிப்பத்
தாவின்று கழிகஎற் கொள்ளாக் கூற்றே”.
                        - நற்றிணை : 27

காதல் கொண்டாரை அடைவதில் ஏற்பட்டுவிடும்