பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

தமிழர் பண்பாடு


காட்டினான் பாம்பே (Pompey). இந்தியக் கருங்காலி மரம் வாணிகம் நெடிது நிலை பெற்றிருந்த ஒன்று. இதுவும், மற்ற மரங்களும் பாரசீக வளைகுடாப் பகுதிக்கு, இந்திய வணிகர்களால், கொண்டு செல்லப்பட்டன. கருங்காலி, நாற்காலி, மேசை போலும் தட்டுமுட்டுப் பொருள் களுக்காகவும் உருவச்சிலைகளுக்காகவும் பயன்படுத்தப் பட்டது. இந்தியாவிலிருந்து, குறிப்பாக மலபார், கர்னாடகம், திருவாங்கூர் மற்றும் வேறு சில இடங்களிலிருந்து வந்த தேக்கு மரங்களைக் கொண்டு, பாரசீக வளைகுடாவில் ஆட்கள் கப்பல்கள் கட்டுவதை தியோப்ரஸ்டஸ் காட்டு கிறார். (Warmington Page 213-214) “மடரடா'’ (Madarata) என. அறியப்பட்ட, தைத்த படகுகள் என அழைக்கப்பட்ட, அராபியரின் படகுகள், தென்னை நாரினால், அதாவது தேங்காய் மட்டைகளிலிருந்து எடுத்த நாரினால் கட்டப்பட்டன. (Scor’s Periplus Page : 154) இக்கால கட்டத்தில் பல்வேறு வகையனவான இந்தியக் கற்கள், மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்றாலும் இந்த வாணிகம்; அடுத்த கால கட்டத்திலேயே பெரிய அளவைப் பெற்றது.

அர்மினியாவில் ஓர் இந்திய வழிபாட்டு முறை

மேற்கு ஆசியாவுடனான இந்த வாணிகத்தின் ஒரு வியத்தகு விளைவு இங்கே விளக்கப்படும். அது, அர்மீனியாவில், ஓர் இந்திய வழிபாட்டு முறையின் நுழைவாகும். அர்மீனியாவைச் சேர்ந்த ‘அரஸ்சிடே” (Arsacide) மரபின் முதல் மன்னனாகிய, முதலாம் வளர்ஷக் (Valarshak) (கி.மு149. 127) காலத்தில், இரு இந்தியத் தலைவர்கள், இயூப்ரட்ஸ் ஆற்றின் மேற்குக் கரையில், வான் (Van) என்ற ஏரிக்குத் தெற்கில், ஒரு புதிய குடியிருப்பை நிறுவி, கிருஷ்ணன் பலதேவன் (அர்மீனிய மொழியில் முறையே கிசனி (Gisani), தெமெதெர் (Demeter) வழிபாட்டிற்காகக் கோயில்களைக் கட்டினர். இது வட இந்தியாவிலிருந்து வந்த, ஆரிய வழிபாட்டு முறையின் பெருக்காகுமா? மிக உறுதியாக இல்லை . கிருஷ்ண பலதேவர்கள், திருமாலின் அவதாரங்