பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

தமிழர் பண்பாடு


மாசுபடுத்த முயன்றுள்ளனர். அவ்வகையில், பழைய தமிழ்ப் புராணங்கள், அவர், சிவன் அல்லது சுப்பிரமணியரிடம் தமிழ் கற்றார். தமிழர்களுக்குத் தமிழைக் கற்பித்தார் என்று கூறுகின்றன. அகத்தியர், தம்மிடையே வந்து காட்சிதரும் வரை தமிழர், எழுத்தறிவவில்லா ஊமையராய் இருந்தனர்? என நான் கருதுகின்றேன். திருவாளர் டி. ஆர். பண்டர்கார் அவர்கள், “அதுவரைக் கண்டறியப்படாதிருந்த தென்னாட் டினுள். திராவிடர்களை நாகரீக மக்களாக மாற்றியவாறே, மேலும் மேலும் ஊடுருவிச் சென்றார்.'’ எனக் கூறுகிறார். "(Carmichal Lecturas. 1918 Page 18) திருவாளர், டி.ஆர். இராமகிருஷ்ண சாஸ்திரி அவர்கள், தமிழர்களின் சமுதாய இலக்கிய வாழ்க்கை முறையில் அகத்தியர் புகுத்திய புதுமை, வகுத்த மறுசீரமைப்புகள் பற்றிப் பேசுகிறார். (Proceedings and Transactions of Third Oriental Conference 1924 Page 205) இவையனைத்தும் வடிகட்டிய சமயச் சார்பான கட்டுக்கதைகள். மக்கள் வாழ்ந்து வளர்ந்த சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டே எழுந்தமையால், மாற்றவோ, அழிக்கவோ முடியாததான, தமக்கே உரிய இலக்கிய மரபுகளோடு இணைந்து, முழுமையாக வளர்ச்சி பெற்ற, ஓர் இலக்கியத்தையே அகத்தியர் கண்டார். முழுமையாக வளர்ச்சி பெற்ற இலக்கிய நடையோடு கூடிய ஒரு மொழியையும் அவர் கண்டார். அம்மொழி இலக்கியம், குறித்த இலக்கணத்தை இயற்றினார். அவ்வளவே, அதுவல்லது வேறு இல்லை.

அகத்தியர் காலத்திற்கு முன்பே, எண்ணற்ற தமிழ்ப் புலவர்கள் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், யாப்பு குறித்த இலக்கணத்தை அவரால் இயற்றியிருக்க இயலாது. திருந்திய இலக்கிய நடையாம் செந்தமிழ் குறித்துக் கூறத் தேவையில்லை. தமிழ்ச் செய்யுள் நடையெழுந்த காலத்திற்கும், அகத்தியனார் காலத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், புறத்திணை, அகத்தணைப் பாடல்களால் உருவாகிய எழுச்சி, அவ்வகை இலக்கியங்களை, அவர் காலத்திற்குப் பின்னர் ஐந்நூறு ஆண்டுவரையும், பண்டைய இலக்கியங்கள் நிலைகுலைந்து, சமஸ்கிருதக் கவிதைகளால் ஈர்ப்புண்டு,