பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் சமஸ்கிருத நாகரீகத்தின்...

211


தமிழ்நாட்டின் தலைமைப் பொறுப்பிலிருந்து, இராவணனை அகற்றினார் எனக் கூறுகிறார். தம் கூற்றுக்கு ஆதரவாக, தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், அகத்தியர், இராவணனை இசையில் வென்றார் எனக்கூறுவதை எடுத்துக் காட்டுகிறார். (இராவணனைத் தமிழ் நாட்டையாளாதபடி போக்கின, கிட்டுதற்கரிய வலியினையுடைய, பழமை முதிர்ந்த, அகத்தியன் இராவணன் தென்திசையாண்டமை பற்றித் தென்னவன் என்றார், அகத்தியனைத், தென்திசையுயர்ந்த நொய்ம்மைபோக, இறைவனுக்குச் சீரொப்ப இருந்தான், என்பது பற்றிக் கடவுள் என்றார். இராவணன் ஆளுதல், பாயிரச் சூத்திரத்து உரையாசிரியர் கூறிய உரையானும் உணர்க." (மதுரைக் காஞ்சி 40 - 42, உரை) என்ற அவர் உரையினைக் காண்க. நச்சினார்க்கினியார் தரும் இப்பொருள் விளக்கம் முழுக்க முழுக்கப் பிழைபட்டது. மதுரைக்காஞ்சி, அகத்தியனாரைக் குறிப்பிடவேயில்லை.

சிலப்பதிகாரம், பழைய தமிழ்ப் புராணக்கதைகளம், ஆரியப் புராணக்கதைகளும், பழைய தமிழ்ப் பழக்க வழக்கங்களும், ஆரியப் பழக்கவழக்கங்களும், வேறு பிரித்துக் காணாவாறு, ஒரே இனத்தைச் சேர்ந்த பிழம்பு வடிவமாக வடிக்கப்பட வில்லையாயினும், ஒன்றோ டொன்று கலக்கத் தொடங்கிவிட்ட கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பாட்டு, இந்தப்பாட்டும், தமிழை முதன்முதலில் தோற்று வித்து, மக்களுக்குக் கற்பித்ததாகக் கூறும் அகத்தியப் புராணத்தின் மூலத்தைக் காணப் பெரிய அளவில் துணைபுரியவில்லை . இது, இந்திரன் மகன் சயந்த குமரன், வானுலக ஆடல் மகள் உருப்பசி, ஆகியோரை, அகத்தியர் சபித்ததைக் கூறுவதோடு, அகத்தியர் குறித்த வேறு ஒரு குறிப்பையும் தருகிறது. அது, மாடலன் என்ற பார்ப்பன யாத்திரிகன் குமரியில் நீராடச் செல்வதன் முன், அகத்தியர் இருந்த மலையை வலங் கொண்டதைக் கூறுகிறது.

"தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய