பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

தமிழர் பண்பாடு


மலைப்பரும் சிறப்பின் வானவர் மகளிர்'’
          - சிலம்பு : அரங்கேற்றுக் காதை :1 - 4

"மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலம் கொண்டு ,
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து”
              - சிலம்பு : அடைக்கலக்காதை : 13-15

அடுத்த பெருங்காப்பியமாகிய மணிமேகலை, மேலே கூறிய காப்பியமாம் சிலப்பதிகாரக் காலத்தைச் சேர்ந்ததாகக் கொள்ளப்படினும், அது, பழைய தமிழிலக்கிய மரபுகள் எல்லாம், சமஸ்கிருத இலக்கிய மரபுகளால், தமிழிலக்’ கியத்திலிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டுவிட்ட மக்களின் வாழ்க்கை முறை, ஆரிய ஆதிக்கத்தின் கீழ் முழுமையாகக் கொண்டவரப்பட்டுவிட்ட மக்களுக்கு இட்டு வழங்கிய தமிழ்ப் பெயர்களெல்லாம், சமஸ்கிருதப் பெயர்களால் இடம் கொள்ளப்பட்டுவிட்ட காலத்து “நிகழ்ச்சிகளைப் பற்றியே கூறுகிறது. ஆனால், இந்தக் காப்பியமும், அகத்தியர் பற்றிய கதைகளில் ஒரு சிலவற்றையே கொண்டுளது. அவற்றுள் ஒன்று, நீர்வேட்கையுற்ற காந்தமன் என்ற சோழ மன்னன் வேண்ட, அமர முனிவனாம் அகத்தியனடைய நீர்க்குடம் கவிழத் தோன்றிய காவிரிப் பெண்ணைக் குறிப்பிடுகிறது.

"கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட,
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை'’.
                 - மணிமேகலை : பதிகம். 10-12

ஸ்காந்த புராணம், இந்த வேண்டுகோள் விடுத்ததை, இந்திரனுக்கு ஏற்றுகிறது. சமஸ்கிருதத்தில் காவிரி, காவேரி என அழைக்கப்படுகிறது. காவேரி, கவேரன் என்ற முனிவன் மகளாகக் கூறுப்பட்டுளது. இக்கதை, மணிமேகலையில், "தவாநீர்க் காவிரிப் பாவை தன் தாதை கவேரன்” (மலர்வனம் புக்க காதை : 55-56) "கவேர கன்னி” (பீடிகை கண்டு பிறப்பு