பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

தமிழர் பண்பாடு


மற்றொரு குறிப்பும் இடம் பெற்றுளது. அது, பரசுராமன், க்ஷத்திரிய அரசர்களையெல்லாம் அழித்து வரும்போது, காவிரிப் பூம்பட்டினத்துக் காவல் தெய்வம், மறைந்து கொள்ளுமாறு ஆணையிட, காந்தமன் என்ற அரசனும் துயர் தீர்ந்துவிட்டது என அகத்தியன் அறிவிக்கும் வரை, தலைநகரைக் காக்குமாறு பின்னோனுக்கு ஆணையிட்டு, அம்முனிவர் தவப்பள்ளியில் மறைந்து வாழ்ந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது.

"மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
தன்முன் தோன்றல் தகாது ஒளி நீ எனக்
கன்னி ஏவலின் காந்த மன்னவன்....
............................
அமர முனிவன் அகத்தியன் தனாது
துயர் நீங்கு கிளவியின் யான்தோன் றளவும்
ககந்தன் காத்தல்”
                - மணிமேகலை: சிறைசெய்காதை:25-27 மற்றும் 35-36

இதன் பொருள்: அரசர் குலத்தை அழித்த, மழு என்றவாள் ஏந்திய நெடிய திருமாலாம் பரசுராமன் முன் தோன்றுவது தகாது, நீ மறைந்து கொள் எனக் கன்னித் தெய்வம் ஆணையிட, காந்த மன்னவன் தேவமுனிவனாம் அகத்தியன் கூறும், துயர் தீர்ந்துவிட்டது என்ற சொல் கேட்டு, நான் வரும் வரை ககந்தா! காப்பாயாக என்பதாம்.)

கி.பி. முதலாம் ஆயிரத்தாண்டினைச் சேர்ந்த இந்தக் கதைகள் எதிலும், அகத்தியர், தெய்வ ஆசிரியனிடமிருந்த தமிழைப் பெற்றது அல்லது கற்றதைக் குறிப்பிடவில்லை. ஆகவே, பிற்காலத்தே வாழ்ந்த அகத்தியனார், முதல் தமிழிலக்கணத்தை எழுதிய உண்மை நிகழ்ச்சி , முதல் அகத்தியர், தமிழைச் சிவன் அல்லது சுப்பிரமணியரிடமிருந்து கற்றுத் தென்னிந்திய மக்களுக்குக் கற்றுத் தந்தார் என்ற புராணக் கதையாக மாறியது. உரையாசிரியர்கள் பெருகிப் பழங்காலம் குறித்த புராணக்கதைகளைக்