பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தமிழர் பண்பாடு


நெறி. ஸ்ரீ கிருஷ்ணன் பின்வருமாறு கூறுவது காண்க. ‘'அருவுருவாம் இறைவன் மீது இதயத்தை நிறுத்தி வழிபடுவார், அனுபவிக்க வேண்டிய துன்பம் மிகப் பெரிதாம். அகவுணர்வுகளுக்குப் புறஉருவம் கொடுத்து, வழிபடுவார்க்கு, இறைவனை அருவுருவ நிலையில் நிறுத்தி வழிபடும் நெறி, மிகப்பெரிய துன்பத்தைத் தரும்...... (கிலெஸொதிகரஸ் தெஷாம் அவ்யக்தாஸக்த செதஸாம் அவ்யக்தாஹிகதிர் - துக்கம் தெஹவத்பிர் அவாப்யதெ.

பகவத் கீதை - 12:5

வைதீக வழிபாட்டு முறை, மக்களில், நான்கு வருணங்கள் பிரிக்கப்படுவதைத் தேவைப்படுத்திற்று. வேத, வேதாந்தங்களைக் கற்பதிலிருந்து, நான்காவது வருணமக்களை ஒதுக்கி வைப்பதற்கும் கொண்டு சென்றது. மக்களை நான்கு வருணங்களாகப் பிரிப்பது, வருணாஸ்ரம தர்ம வளர்ச்சிக்கும், அந்நான்கு வரணத்தவர்க்கும் ஆஸ்ரமங்களை வகைப்படுத்து வதற்கும் வழி வகுத்துவிட்டது. இதன் விளைவு, சந்நியாசம், பிராமணர் ஒருவர்க்கு மட்டுமே உரிமையுடையது. மோக்ஷம், சந்நியாச வாழ்க்கையில் இடம் பெறும் தனிப்பயிற்சிக்குப் பின்னரே அடையக்கூடும் என்ற கோட்பாடுகளாயின. இக்கோட்பாட்டின் முடிந்த முடிவு, வைதீக நெறிப்படி, மோக்ஷம் பிராமணர்களால் மட்டுமே அடையக் கூடியது என்பதாகிறது.

ஆகம நெறி, இக்கோட்பாட்டுக்கு எதிராக நிற்கிறது. எவன் ஒருவனும், ஏன், ஒரு சண்டாளனும் கூட, விஷ்ணு அல்லது சிவனின் திருமேனி அல்லது சின்னத்தைக் கொண்டு வந்து வைத்துப் பூசை செய்யலாம். சிவனடியார்கள் வரலாறு கூறும் தமிழ்ப் பெரிய புராணம், கோயில்களில், சிவனை வழிபட்ட, இழிகுலத்துச் சைவ அடியார்களைக் குறிப்பிடுகிறது. காளத்தித் திருக்கோயிலில் உள்ள சிவனுக்குக் கண்ணப்ப நாயனார், இறைச்சி உணவைப் படைத்துள்ளார். வைஷ்ணவ ஆழ்வார்களில் ஒருவரான, பெரும்பாலும் கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணன், சீரங்கம் திருக்கோயிலைக் சூழ உள்ள தெய்வத் திருமண்ணில் நடப்பதற்கும் தகுதி அற்றதாம் அளவு இழிவுடையவராகக் கருதப்படும்,