பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

72 ஆருயிர் மருந்து எனவே இராகு காலையில் வருவதாகச் சொன்னான். லனும் அவன் மனைவியும் தம் சமையற்காரனை விடியற் காலையில் வந்து உணவு சமைக்குமாறு சொன்னார்கள். ஆனால் அவனோ எக்காரணத்தாலோ. காலம்தாழ்த்து வந்தான். தன் தவறு உணர்ந்து, தள்ளாடி நடந்து, கையிடைக் கொண்ட பாத்திரத் தையும் கீழே தவறிவிட்டு உடைத்தான். அவன் அச் சம் கண்டும் அவனிடம் பரிவு காட்டாது, முனிவற்கு உணவளிக்கக் காலம் தாழ்த்தது என்ற ஒன்றையே கருதி அவனை இராகுலன் வாளால் வெட்டி வீழ்த்தி னான். அந்தப் பாவமே அவனை முற்பிறவியில் திட்டி விடங்கனால் மாளச் செய்தது. இப்பிறவியில் காஞ்சனன் வாளுக்கு இரையாக்கியது, ஆகவே எவ்வளவு அறத் தாறு செல்லினும், அவற்றுள் புகும் மறச் செல்லுக்கு உரிய துன்பத்தைப் பெறத்தான் வேண்டும்' என்று எடுத்துரைத்தது. வருவது உரைத்தது இவற்றை உரைத்த தெய்வம் மணிமேகலைக்கு மேல் வரும் செயல்களைப் பற்றியும் சொல்லிற்று. ' தன் மகன் இறந்ததை' அறிந்த சோழன், மேலும் உன்னால் தீங்குண்டாகும் என்று கருதி உன்னைச் சிறை செய் வான். பின் சிறையிலிருந்து மீட்டுக் கோப்பெருந்தேவி தன்னுடன் வைத்துக்கொண்டு, உன்னைக் கொல்லவும் மாசு படுத்தவும் முயல்வாள். பின்னர் உன் ஆற்றல் உணர்ந்து கொள்வார்கள். அறவணவடிகள் மூலம் நீ விடுதலை பெறுவாய். பின்னர் நீ ஆபுத்திரன் நாட டைந்து அவனுடன் மணிபல்லவம் செல்வாய். அங்கு அவன் பிறப்பை யெல்லாம் தீவதிலகை வாய் மொழி