பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

T 73 ஆருயிர் மருந்து யினால் சுேட்டு அவன் தன் நாட்டிற்குச் செல்வான். நீயோ அத்தீவினை விட்டு வஞ்சிமா நகர் புகுவாய். அங்கு பல்வேறு சமயக் கணக்கர் தம் அறிவறிந்த உரைகளை யெல்லாம் கேட்பாய். அங்கு பல்வேறு சம யத்தவர்களும் உள்ளனர். ஆதலின் அவர் தம் வாதம் களை யெல்லாம் கேட்டு உன் சமயக் கொள்கையை உறு திப் படுத்துவாய். இது இனி வரும் வாழ்வாகும். என்னை யார் என்று கேட்டாய். நான் தெய்வ கணத் தைச் சேர்ந்த ஒருவன். என் பேர் துவதிகன் என்பது. இத்தூணில் என்னைப்போன்று அழகாகச் செய்யப் பட்ட இவ்வுருவத்திலிருந்து என்றும் நீங்கேன்' என்று தெய்வம் எடுத்துரைத்தது. பின்னைப் பிறவிகள் அனைத்தையும் கேட்ட மணிமேகலை துணுக்குற் றாள். தன் வாழ்வில் இன்னும் எத்தனையோ நிகழ இருப்பவற்றை எண்ணி நெடிதுயிர்த்தாள். வஞ்சிமா நகர் சென்ற பின் தன் வாழ்வு என்னாகுமோ என்று நினைத்தாள். புத்த தேவன் பொன்னடி பொருந்தும் காலம் தனக்கு என்று வருமோ என்று ஏங்கினாள். ஆகவே அத்தெய்வத்தை நோக்கி, வஞ்சி நகர் சென்ற பின் நேரும் நிகழ்ச்சிகளையும், தான் நிர்வாணம் பெறும் நாளையும் கூற வேண்டுமென்று கேட்டாள். அத்தெய் வம் மேலும் சொல்லிற்று. 'வஞ்சியில் உன்தாய் கண்ணகியைக் கண்டு வழி படுவாய். அப்போது காஞ்சிமா நகரில் பெரும் பஞ் சம் தோன்றி மக்களை வருத்துவதையும், அனைவரும் உன் வரவை எ திர் நோக்கி யிருப்பதையும் உணர்ந்து கொள்வாய். பின் உன் தாய். அறவண்டிகள் ஆகி