பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

74 ஆருயிர் மருந்து யோர் செல்ல, நீயும் காஞ்சி நகர் சென்று பசிப்பிணி களைவாய்.அந்நாட்டு அரசன் உன்னை ஏற்று அங்கேயே அறமாற்றும் வகையில் உனக்கு ஆவன யெய்வான். நீ அங்கே தங்கும் காலத்து நன்மழை பெய்து நாடு செழிக்கும். இன்னும் பல நன்னிமித்தங்கள் எழும். அங்கிருந்து அறவணடிகள் மூலமும், வேறு வகையி னும் பல்வேறு அறங்களை அறிந்தும், இயற்றியும், மற்ற வர்களுக்கு அறிவுறுத்தியும் இப் பிறவியைப் போக்கு வாய். பின், இப்பிறவியை விட்டு மேல் பிறப்புக்களை யெல்லாம் உத்தரமகதத்துப் பிறப்பாய். அப்பிறவிக ளெல்லாம் உனக்கு ஆண் பிறவிகளாகவே நிகழும். பல பிறவிகள் கழிந்த பின் புத்த தேவனது தலைமை மாணாக்கனாகிப் பற்றறுத்துப் பெரும்பே றெய்துவாய். இன்னும் கேள். முள்னொரு காலத்து உன் குல முன் னோன் ஒருவனைக் கடலிருந்து எடுத்துக் காப்பாற்றிய மணிமேகலா தெய்வம், நீ சென்ற பிறவியில் சாதுசக் கர முனிவனை உண்பித்த புண்ணியமிகுதியினாலே உன் னைக் கொண்டு சென்று உன் பழம் பிறப்பை உணர்த் திற்று' என்று தெய்வ வடிவிலுள்ள துவதிகன் சொன் னான். மணிமேகலையும் உதய குமரன் பால் தான் . கொண்ட கருத்தை மாற்றி, வருவன வற்றை எண்ணி அமைதி பெறுவாளானாள். அதற்குள் பொழுதும் விடிந்தது. முனிவர் செயல் பொழுது விடிந்ததும் அங்கே சோலைகளில் தங்கி யுள்ள முனிவர்கள் கந்திற் பாவையையும், சம்பாபதி யையும் வழிபடலாயினர். அவர்கள் வழிப்பட்டு வரும் போது எதிரே உதயகுமரன் வாளால் வெட்டுண்டு