பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

4 75 ஆருயிர் மருந்து வீழந்து கிடப்பதைக் கண்டனர். உடனே அவர்கள் மணிமேகலையை அழைத்து அவள் கொலைக்குக் கார ணம் அறிவாளோ என்று கேட்டனர். அவளுந் தான் கண்டும் கேட்டும் அறிந்த அத்தனையும் ஒளியாமற் சொன்னாள். அவர்கள் வருந்தினர். பின், அரசன் சீற்றத்துக்கு அவள் உள்ளாதலும் கூடும் என்று அஞ்சி அவளையும் உத்யகுமரன் உடலையும் மறைத்து வைத்து நேரே அரசமன்றம் சென்றனர். மருதியின் வரலாறு வாயில் காவலன் வழிகாட்ட உள் சென்று அர சனைக் கண்ட அம்மாதவர் அவனை வாழ்த்தினர், அவ னிடம் நேரே அவன் மைந்தன் செய்த கொடுமையை யும் அவன் கொலைப்பட்டு வீழ்ந்ததையும் கூற அஞ்சி னர். எனவே அவர் தம் சோழ நாட்டில் முன்னே நிகழ்ந்த சில வரலாறுகளை யெல்லாம் சொல்லி, அவன் மனமறிந்து பின் உதயகுமரன் வரலாற்றை உரைக்க முடிவு செய்தனர். அதன்படியே ஒரு முனிவர் அந் நாட்டுப் பழைய வரலாறு ஒன்றை உணர்த்தத் தொடங்கினர். ‘அரசே, இன்றுமட்டு மன்று, இந்நகரத்தே காம வயப்பட்டு கற்புடை மகளிரைக் கெடுக்க விழைபவர் வாழ்விழந்து இறந்த வரலாறு மிகப் பழங் காலத்திலே யும் உண்டு. கேள் ! ஒரு காலத்தில் சூரிய குலத்து அரசர்களை வேரறுத்த பரசுராமன் இச்சோழர் குலத்தைக் கரு வறுக்க வந்தான். அது அறிந்த இந் நகர்த் தெய்வ மாகிய துர்க்கை அப்போதாண்ட காந்தன் என்னும்