பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

ஆருயிர் மருந்து அரசனை அழைத்து அவனை அப்போது பிரசுராம னிடம் போரிட வேண்டாம் என்று சொல்லிற்று. உடனே அவன் தான் அங்கிருத்தல் தகாதது என்று கருதினான். உடனே தன் நாட்டைத் தக்க ஒருவனிடம் ஒப்படைத்து அங்கிருந்து புறப்பட முடிவு செய்தான். தக்கவர் யார் என்று ஆராய்ந்தான். காதற் கணிகை யின் புதல்வனாகிய ககந்தன் என்பவன் தக்கவன் என அறிந்து, அவனை அழைத்து, அவன் சூரிய குலத்து அரச உரிமை பெறாத காரணத்தால் அவனைப் பரசு ராமன் ஒன்றும் செய்யமாட்டான் என்று கூறி, அகத் தியர் அருள் பெற்று வருமளவும் அவனை அரசனாக்கி விட்டுச் சென்றான். மேலும் ககந்தன் ஆண்ட காரணத் தில் இந்நகர் 'காகந்தி' என்று அழைக்கப்பட வேண் டும் என்றும் கூறினான். 76 பிறகு இந்நகரம் ககந்தனால் ஆளப்பட்டது. அவனது மக்கள் மன்னனைப் போன்று அறவழி செல் லாதவர்கள் போலும். அவருள் ஒருவன், பத்தினிப் பெண்ணாகிய மருதி யென்பவளைக் காவிரியிலிருந்து நீராடி வரும்போது ஒரு நாள் கண்டான். அவள் பால் காம இச்சை கொண்டவனாகி, அவள் உறுதியற்றவள் என்று கருதி அவளைச் சென்று காதல் குறிப்புத் தோன்ற அழைத்தான். அதை அறிந்த மருதி மிகவும் வருந்தினவளாகி உலகில் மழைவளம் தரும் கற்பு டைப் பெண்டிர் கணவ னன்றிப் பிறர் நெஞ்சு புகார் ’ என்று கூறும் மொழி பொய்யா? நான் அக் கொடிய வன் உள்ளத்தே புகுந்தமையான் என் கற்பு கெட் டதே: நான் என் கணவனுக்கு உரியவள் அல்லேன்' எனக் கலங்கி வீடு செல்லாது, அருகே உள்ள பூத //