பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

1 77 ஆருயிர் மருந்து சதுக்கம் புகுந்தாள். அங்கு தன் குறைகளைக் கூறி, அக் கொடுமைக்குக் காரணம் யாது எனக் கலங்கிக் கேட்டாள். அங்குள்ள பூதம் அவள் முன் தோன்றி அவள் பிறன் நெஞ்சு புகுதற்குக் காரணத்தைக் கூறிற்று.

  • தெய்வம் தொழான் கொழுநற் றெழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை, என்ற அப் பொய்யில் புலவன் பொருளுரை தேராய் பிசியும் நொடியும் பிறர் வாய்க் கேட்டு MCHE மூழவின் வீழாக் கோள் விரும்பிக் கடவுள் பேணல் கடவியை ஆதலின் மடவரல் ஏவ மழையும் பெய்யாது நிறையுடைப் பெண்டிர் தம்மே போலப் பிறர் நெஞ்சு சுடும் பெற்றியு மில்லை " என்று உணர்த்தி, அவள் வஅளுவர் வாய் மொழியை மறந்து, கணவனைத் தவிற, பிறதெய்வங்களை வணங்க விழாக்களுக்குச் செல்கின்றமையின் அவள் கற்பிற்கு இழுக்கு வந்ததென்றும், மேலும் அவள் அத்தகைய தவற்றைச் செய்யாதிருப்பின் அவள் வாய்மொழி வழி மழையும் பெய்யுமென்றும் கூறி அவளை விரும்பிய காமுகனை மன்னன் ஏழு நாளில் தண்டிப்பான் என்றும், அப்படித் தண்டியா தொழியின் பின் தான் தண்டிப்ப தாகவும் கூறிற்று. அப்படியே அக் கொடியோன் தன் தந்தையாகிய ககந்தனால் வெட்டப் பட்டனன். விசாகையின் வரலாறு ‘இவ்வூரிலேயே நடந்த இன்னொரு வரலாற்றையும் கேட்பாயாக. தருமதத்தன் என்பானும் அவன் மாமன் 6