பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

78 ஆருயிர் மருந்து மகள் விசாகை என்பவளும் மிக்க அழகினர். தம்முள் நெருங்கிப் பழகினர். அதை அறிந்த ஊரார் அவர்கள் யாழோர் மணவினை மேற்கொண்டனர் எனக் குறை கூறினர். அதை அறிந்த விசாகை உலக அறவியில் சென்று கந்திற் பாவையிடம் தனக்குள்ள குறையைக் கூறினாள். அத்தெய்வம் அவள் தவறிலள் என்பதை அனைவரும் அறியக் கூறியது. மக்கள் அவள் சிறப்பை வியந்தனர். எனினும் தெய்வம் இல்லெனில் தன் குறை நீங்கியிராதே என்று கருதிய விசாகை, தன் மைத்துனனை இம்மையிலன்றி, மறுமையில் தான் மணப்பதாக உறுதி கூறி, கன்னிமாடம் புகுந்து காலம் கழிப்பாளாயினன். தருமதத்தனும் இந்நகர் விட்டு நீங்கி, மதுரையை அடைந்து வாணிபம் செய்து சிறந்த செல்வனாயினன். அந்நகர வேந்தன் அவனுக்கு எட்டி முதலிய பட்டப் பெயர் கொடுத்துச் சிறப்புச் செய்தனன். அத் துணைச் சிறப்பு பெற்ற போதிலும் தன் மாமன் மகளன்றி மற்றொருத்தியைத் தீண்டாது, மணமின்றி வாழ்நாள் கழித்தான். அவனுக்கு அறு பது ஆண்டு வந்துற்றது. அப்போது ஒரு அந்தணன் அவனிடம் சென்றான்: எத்துணைச் செல்வம் இருப் பினும் பயனின்று என்று எடுத்துரைத்தான்.

  • பத்தினி யில்லோர் பலவறஞ் செய்யினும்

புத்தே ளுலகம் புகார் என்பது கேட்டும் அறிதியோ : கேட்டனை யாயின் நிட்டித் திராது நின்னகர் அடைக' என்று கூறி, விரைந்து அவனை இந்நகர் செல்லப் பணிந்தான். அவனும் அவ்வாறே புறப்பட்டுத் தன் வீடு வந்து சேர்ந்தான். அவன் வருகை அறிந்த