பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

F 79 ஆருயிர் மருந்து விசாகை புறப்பட்டு வந்து அவனைக் கண்டு, தாங்கள் எவ்வாறு மாறி யுள்ளனர் என்பதையும், மூப்பின் எல்லையில் உள்ளதையும் கூறினள். மேலும் அவள் மறுமையில் அவனை அடைய இருந்த விருப்பையும் உணர்த்தினள். அது கேட்ட அவன் இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா புத்தே ளுலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுந்துணை யாவது' என்று கூறித் தன் பொருளை யெல்லாம் அவளிடம் கொடுத்து அறமாற்றி வாழ்ந்து வந்தான். அத்தகைய அற ஒழுக்கம் உடைய விசாகை இளை யளாய் இருந்தபோது தெருவே சென்றாள். அவளைக் கண்டு காமுற்ற, முன் மருதியால் மடிந்த அரசகுமர னின் அண்ணன் தன் தலையிலிருந்த மாலையை யெடுத்து அவள் கழுத்தில் சூட்டுவதற்காகக் கையைத் தலையிடைச் செலுத்தினான். செலுத்தியாகை அப்படியே நின்றுவிட்டது. அதை அறிந்த ககந்தன் அம் மைந்தனை யும் வாளால் வீசினான் என்று கூறினர். உதயகுமரன் செயல் முனிவர் கூறிய அனைத்தையும் கேட்ட மன்னன் மாவண்கிள்ளி ஒன்றும் அறியானாய் 'இன்று மட்டு மன்று என்று தொடங்கி இத்துணையும் கூறிய முனிவர்களை நோக்கி 'இன்றும் அதுபோன்ற கொடுமை நிகழ்ந் துளதோ?' என்று கேட்டான், முனிவர் கூறு வதற்கு அஞ்சின ராயினும் மெள்ள நிகழ்ந்ததைக் கூறினர். நிகழ்ந்ததைக் கூறுமுன் நன்னெறி கூறினர்.