பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

80 ஆருயிர் மருந்து முடிபொருள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் கடியப் பட்டன ஐந்துள; அவற்றில் கள்ளும் பொய்யும் களவும் கொலையும் தள்ளா தாகும் காமம் தம்பால் ஆங்கது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என நீங்கின ரன்றே நிறைதவ மாக்கள் நீங்கா ரன்றே நீணில வேந்தே தாங்க நரகம் தன்னிடை உழப்போர்' என்று உலக நெறியை விளக்கிய பின். கோவலன் இறந்தபின் மாதவி துறவு பூண்டதும், மணிமேகலை பிக்குணிக் கோலம் கொண்டதும், உதயகுமரன் காத லுற்றதும், காயசண்டிகை வடிவுடைய மணிமேகலையை விஞ்சையன் தன் மனைவியெனக் கருதியதால் உதய குமரனை வெட்டி வீழ்த்தியதையும் கூறினர். மணிமேகலை சிறைப்படல் தன் மகன் இறந்தான் என்பதை எண்ணி உள்ளம் வருந்தவில்லை மாவண்கிள்னி. தன் அமைச்சனாகிய சோழிக ஏனாதியை நோக்கினான். தான் இடவேண்டிய தண்டனையை விஞ்சையன் செய்தது தவறு என்று சொல்லி வருந்தினான். மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல் இன்றெனின் இன்றே' என்று கவன்றான். பின்னர் மகனை முறை செய்து தேர்க்காலில் மடித்த மனு வேந்தன் வழி வந்த இச்சோழர் குலத்திலே இக்கொடியனும் பிறந்தான் என்ற சொற் பிற மன்னர் செவிப் படுமுன் உதயகுமரனைத் தீயிடை Y யிடச் சொன்னான். மணிமேகலையையும் சிறை செய்யக் கட்டளையிட்டான். முனிவர் விடை பெற்றுச் சென்