பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

81 ஆருயிர் மருந்து றனர். அமைச்சனும் அரசன் ஆணைவழி உதய குமரனை எரியிடை. யிட்டு, மணிமேகலையையும் சிறை செய்தான். அரசமரதேவியின் வஞ்சனை மன்னவன் தன் மகன் பிரிவினைக் குறித்து அவ்வளவாக வருத்தமுறவில்லை யாயினும், அவன் தேவியார் துன்ப முற்றனர். ஆள இருந்த தம் குலக் கொழுந்து வாளால் மாளநேர்ந்ததே என்று மனம் மாழ்கினர். அவள் வருத்தமறிந்த மன்னவன் வாசந் தவை என்னும் வயதுமுதிர்ந்த ஒரு கிழவியை அனுப்பி அவளுக்கு ஆறுதல் சொல்லச் செய்தான். அவளும் ‘ கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும், பட்டவை துடைக்கும் பயங்கெழு மொழி'யினால் பற்பல சொல்லித் தேற்றினாள். அரசன்முன் தன் வாட்டத்தை எள்ள ளவும் காட்டலாகாது என்று வற்புறுத்திச் சொல்லி விட்டு அவள் சென்று விட்டாள். கிழவியும் மற்றவரும் எவ்வளவு கூறியும் கோப் பெருந்தேவியின் மனம் அமைதி பெறவில்லை. தன் மகன் மடியக் காரணமா யிருந்த மணிமேகலையை எப் படியாயினும் வஞ்சித்துக் கொண்டுவந்து பழிக்குப் பழி வாங்கவேண்டுமென்று விரும்பினாள். அவ்வாறே அரசனை அணுகி மணிமேகலையைச் சிறை செய்திருத்தல் தவறென்றும், தன்னுடன் இருக்கத் தக்க வகையில் அவளை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டாள். தன் மகன் தவறிழைத்த காரணத்தால் அவன் இறந்தது சரியே என்று கூறி, பிக்குணிக் கோலத் தோ டிருந்து இளமை கேடுறுவதைக் கருதாது நல்லறம் புரியும் மணிமேகலைக்குச் சிறை ஏற்ற இடம் அன்று எனவும், தன்னொடு அவளை இருக்க விடவேண்டும் என