பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

82 ஆருயிர் மருந்து வும் கேட்டுக்கொண்டாள். மன்னவன் அவள் வேண்டு கோளுக்கு இணங்கி மணிமேகலையைச் சிறை வீடு செய்து அரசியொடு அந்தப்புரத்துக்கு அனுப்பினான். முக்கொடுஞ் செயல்கள் தன்னொடு வந்த மணிமேகலையை எப்படியாவது அறிவு திரித்துத் தெருவெலாம் பயித்தியமாகத் திரியும் படி செய்து, தன் மகனைக் கெ ன்ற வருத்தத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று முடிவு செய்தாள் அரசி. எனவே பித்தேறுதற் கேற்ற வகையில் பலப் பல மருந்துகளைக் கொடுத்தாள். மணிமேகலையோ மறு பிறப்புணர்ந்தவ ளாதலால் அதனால் யாதொரு மாறு பாடும் அடையாது அமைதியாக இருந்தாள். பின்னர் ஒரு கல்லா இளைஞனை அழைத்து, அவனுக்குக் கை நிறையப் பொருள் தந்து, மணிமேகலை தனியாக இருக் கும் இடத்திற்குச் செல்லுமாறு பணித்து, அங்கு அவ ளைப் புணர்குறி செய்து, அதை நகரில் உள்ளார் பலருக் கும் உணர்த்தி இழிவு செய்ய ஆணையிட்டாள். அவ் வஞ்சத்தை அறிந்த மணிமேகலை தன் உருமாறும் மந் திரத்தால் ஆண் உரு எய்தி யிருந்தாள். அவ்வாண் உருவைக் கண்டான் அவன். அரசியின் அந்தப்புரத்தில் ஆடவரே அணுகார் என்பதை அக் காமுகன் அறிவா னாதலாலும், தனக்கு முன்னமே அங்கொரு ஆண் இருப் பதாலும், அரசி ஏதோ வஞ்சனைக்குள் தன்னை உட் படுத்த எண்ணினாள் எனக் கருதி, சொல்லாமல் அவ் விடம் விட்டுத் தெரியாத தூரத்தில் சென்று மறைந்து விட்டான் தன் செயல் இரண்டும் பழுதுற்றதை அறிந்த அரசி அவள் நோய்வாய்ப் பட்டாள் என்றும் உணவு வேண்டாம் என்றும் கூறிப் புழுக்கறையில்