பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

Y 03 ஆருயிர் மருந்து அடைத்தாள். மணிமேகலை அங்கும் தான் கற்ற பசியா மந்திர வலிமையால் யாதொரு வாட்டமும் உறாது இருந்தாள். இவற்றைக் கண்ட அரசி கருத்தழிந்தாள். அரசியின் மன மாற்றம் கருத்தழிந்த அரசியார் அஞ்சித் தான் செய்த பிழைகளை யெல்லாம் நினைத்து மணிமேகலையிடம் மன்னிப்புக்கேட்டுக் கொண்டு ஒதுங்கி நின்றாள். கண்ட மணிமேகலை உலக நிலையாமையையும், மக்களுக்குள் உள்ள தொடர்பினையும் நன்கு விளக்கினாள். சென்ற பிறவியில் திட்டிவிடத்தால் கணவன் இறக்கத் தான் உடன் கட்டையேறி உயிர் துறந்தபோது அழாத அவள் இப்பிறவியில் மகனாகிய காரணத்தால் மட்டும் அழுவது ஏன் என்றாள். மற்றும் அழுவது உயிர்க்கா உடலுக்கா என்றாள். உடலுக்காயின் அழுத அவர் களே அவ்வுடலை எடுத்து நெருப்பி லிடுவானேன். உயி ருக்காயின் அவ்வுயிர் நிலை அறிந்து 'எவ்வுயிர்க்காயி னும் இரங்கல் வேண்டுமே' என்றாள். மேலும் இவ் வுதய குமரன் வாளால் வீழக் காரணமாயிருந்த, முன் னைப் பிறவியில் சமையலாளனைக் கொன்றதை எடுத் துக் காட்டினாள். பின்னும் தான் அவ்வூரிலும் மணி பல்லவத்திலும் தெய்வங்களால் அறிந்த அத்தனை உண்மைகளையும் உணர்த்தினாள், அவள் செய்த கொடு மைகளுக்குத் தப்பக் காரணமாயிருந்த முப்பெருமந்திர வலிமையையும் உரைத்தாள். தான் அங்கிருந்து உருக் கரந்து உயரப் பறந்து செல்லும் ஆற்றல் பெற்றும் அவ் வாறு செய்யாமைக்குக் காரணம், அவ்வரசி, தன் முன் னைப் பிறவியின் கணவனான இராகுலனுக்கு இப்பிறவி யில் தாயா யிருந்தமையே என்பதையும் எடுத்து விளக் !