பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

84 ஆருயிர் மருந்து கினாள். மக்கள் காமத்தையும் கொலையையும் நீக்கி வாழின் நலம் உண்டு என்று பல்வேறு வகையில் அற வுரை புகன்றான். அரசிக்கு அறவுரை அறிஞர்தம் உரை கேட்டும், உலக நிகழ்ச்சிகளைக் கண்ணாரக் கண்டும் மக்கள் மனமாற்றம் உற்று அறிவு வரப் பெற்று அறமாற்றவேண்டிய நெறிக ளனைத்தை யும் மணிமேகலை எடுத்து விளக்கினாள். உலகில் கல்வி முற்ற அறிவை வளர்க்கும் என்றாலும் அதற்கும் மேம் பட்டது செற்றம் விடுத்து மற்றவர் துயர் துடைப்ப தாகும் என்றாள். 'கற்ற கல்வி அன்டூல் காரிகை செற்றஞ் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் மல்லன்மா ஞாலத்து வாழ்வோர் என்போர் அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புனர் திருத்தேர் எல்வனை செல்லுலகு அறிந்தோர் வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர் துன்பம் அறுக்கும் துணிபொருள் உணர்ந்தோர் மன்பதைக் கெல்லாம் அன்பொழியார்' என்று பல்வேறு வகையில் கல்வியும், உலக வாழ்வும், செல்லுலகச் சிறப்பும், துணிபொருள் உணர்வும் எல் லாம் மற்றவர் துன்பம் துடைக்கும் செந்நெறியில் அமைந்துள்ளன என்பதை முறைப்படி எடுத்துக் காட்டினள் மணிமேகலை, தன்மகன் இறந்த காரணத்தால் சுடப்பட்ட உள் ளத்தை உடைவளாகிய அரசியார், மணிமேகலை கூறிய நன்மொழிகளால் அச்சூடு மாற்றப் பட்டவளாகித்