பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

Y ஆருயிர் மருந்து 85 தூய உள்ளம் பெற்று, உலக நிலையையும், தன் உள்ள நிலையையும், மணிமேகலையின் மாண்பினையும் நன்கு உணர்ந்தாள். உணர்ந்த உடனே அவ்வுணர்ச்சிப் மணிமேகலை பெருக்கால் அப்படியே அடிகளில் வீழ்ந்து வணங்கினாள். அச்செயலைச் சிறிதும் எதிர் பாராத மணிமேகலை, அரசியார் தன் முந்தைக் கணவ னின் தாயானமையாலும், நாடாளும் அரசியாதலா லும் அவ்வாறு செய்யத்தகாதது என்று சொல்லி, அவ்வரசியின் பாதங்களில் தானும் எதிர்விழுந்து வணங்கினள். சித்திராபதியின் செயல் அரசி மணிமேகலையின் பெருமையை உணர்ந்த பின் சில நாட்கள் அவளைத் தன்னுடனேயே இருத்தி, சிறக்கப் போற்றி வந்தாள். மணிமேகலையும் மனக் கவலை ஒன்றும் இன்றி, தனக்குமேல் நிகழ இருக்கும் செயல்களைப் பற்றியெல்லாம் சிந்தை செய்து கொண் டிருந்தாள். அப்போது அவளது பாட்டியாகிய சித் திராபதி மறுபடியும் மணிமேகலையை எப்படியும் தன் வழிக்குக் கொண்டுவர முயன்றாள். மணிமேகலை பிக்குணிக் கோலத்தோடு வீதிதோறும் சுற்றியதை யும், உதயகுமரன் தன் வாய்மொழிப்படி அவளை அடைய முயன்று அம்முயற்சியிலேயே கொலையுண் டிறந்ததையும் அரசியிடம் கூறிப் பின் மணிமேகலை யைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கேட்க விழைந்தாள். தன் விழைவின் படியே சித்திராபதி விரைந்து புறப்பட்டு அரசியைக் கண்டு வணங்கினாள். வணங்கி மணிமேகலையைத் தன்னிடம் அனுப்பி விடுமாறு