பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

86 ஆருயிர் மருந்து வேண்டினள். மேலும் மணிமேகலையைத் துன்புறுத் தினால் அரசகுமாரன் இறந்தது மட்டுமன்றி அந்நாட் டில் பலவகைத் துன்பங்கள் நிகழும் என்று எச்சரித் தாள். அதற்குரிய காரணத்தையும் கூறுவாளானாள். ‘முன்னொரு நாளில் நெடுமுடிக் கிள்ளி என்பான் இந்நாட்டை ஆண்ட காலத்தில் அழகார் சோலை ஓன் றில் அமர்ந்திருந்தான். அதுகாலை அங்குத் தமியளாகி ஒரு தையல் அழகு நிறையப் பெற்றவளாகி வந்து சேர்ந்தாள். அவளைக் கண்ட மன்னவன் காதல் வயப் பட்டு, அவளைப் பற்ற நினைத்தான். நினைத்த கருத்தை முடித்தான். அவளும் அவனுடன் ஒரு திங்கள் அச் சோலையிலே தங்கி மகிழ்ந்துறைவா ளாயினள். ஒரு நாள் திடீரென அவள் மறைய வருத்தமுற்ற மன்ன வன் அவளை எங்கும் தேடினன். காணப்பெறாது கலங்கினன். பின் தன்முன் எதிர்ப்பட்ட சாரணர் ஒருவரை அவளைப் பற்றிக் கேட்டனன். அவர் அவளை அப்போது அறியாவிடினும் முன்னமே அறிந்ததாகக் கூறி அவள் பிறந்ததும், அவள் ஒரு சூரிய குலத்தர சனைச் சேர்ந்து கருப்பெற்று வருவாள் என்று கணி சொன்னான் என்றும், அதன்படி அவள் வந்து, அவ னுடனிருந்து சென்றாள் என்றும் கூறி, இனி அவள் பெறுமக னல்லது அவள் வாராள் என்றும் எடுத் துரைத்தார். மேலும் என்றாயினும் ஒரு நாள் மணி மேகலா தெய்வத்தின் வாக்கின் படியும், இந்திரன் சாபப்படியும் இந்நகரைக் கடல் கொள்ளுமென்றும், அதற்குப் பரிகாரமாகத் தவறாது இந்திரவிழாவை விடாது நடத்தவேண்டு மென்றும் கூறினன். அதை அறிந்த சோழன் தவறாது இந்திரவிழாவை நடத்தி +