பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

Y ஆருயிர் மருந்து வருகின்றான்' என உரைத்தாள். மேலும் தன் பெயரை உடைய மணிமேகலை வருந்துவாளானால் அத்தெய் வம்' அந்நகர்க்குத் தீங்கிழைக்கு மென்றும், ஆகவே அவளைத் தன்னுடன் அனுப்பவேண்டு மென்றும் கேட்டுக் கொண்டான். " 87 அவள் கூறியவற்றை யெல்லாம் கேட்ட அரசி பெருஞ் செல்வியாகிய மணிமேகலை கள்ளும் பொய்யும் காமமும் பிறவும் நிறைந்த அப்பரத்தையர் சேரியில் வருவதற்கு உரியவள் அல்லள் என்று கூறி அவளைத் தன்னோடு இருத்திக் கொண்டாள். அறவணர்த் தொழுதல் அவ்வாறு அரசியும் சித்திராபதியும் மணிமே கலையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, மாதவி, சுதமதியையும் அறவணவடிகளையும் அழைத்துக் கொண்டு மணிமேகலையைக் காண்பதற்காக அரசியா ரின் அந்தப்புரம் வந்தாள். அறவண அடிகளைக் கண்ட அரசி தன் ஆயத்தோடு எழுந்து சென்று அவர் தம் அடிகளில் வீழ்ந்து வணங்கினாள். அவரும் அறிவுண் டாக என வாழ்த்தி அருளினார். அரசியும்., " யாண்டுபல புக்கரும் இணையடி வருத்த என் காண்டதரு நல்வினை நும்மைஇங் சுழைத்தநு நாத்தொலை வில்லை யாயினும் தளர்ந்து மூத்ததிவ் யாக்கை வாழ்க பல்லாண்டு” என்று கூறி வணங்கினாள். அடிகள் தான் மாலைத் திங்க ளென்ன வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப் பதை எடுத்துக் கூறிப் பின் புத்த சமயத்துப் பன்னிரு நிதானங்களையும் அவருக்கு அறிவுறுத்தினர். உலகில்