பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

88 ஆருயிர் மருந்து மக்கள் பட்டொழுகும் தீவினையின் திறத்தையும் அவை எவ்வெவ்வகையில் மக்களை மயக்குகின்றன வென்பதையும் எடுத்துரைத்து அவற்றின் நீங்கிச் சீலம் பெற்றுச் சிறக்க வேண்டுமென அருளினார். 'கொலையே களவே காமத் தீவிழை உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லெனச் சொல்லில் தோன்றுவ நான்கும் வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று உள்ளந் தன்னில் உதிப்பன மூன்றுமெனப்' பத்து வகையாலே பாகு படுத்தப்படும் குற்றத்தினைக் கூறி, இக்குற்றத்தின் நீங்கியோரே தானம் தலைநின்று சீலம் தாங்கிச் சீர்பெறுவர் என்றும் விளக்கினார். அவர் தம் அறிவுரை கேட்ட அனைவரும் அசையா ஓவிய மென அமைந்திருந்தனர்