பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

ஆருயிர் மருந்து காவிரிப்பூம்பட்டினத்திற்கே வணக்கம் செலுத்திவிட்டு வான் வழிப் பறந்து செல்வாளானாள். நெடுந் தூரம் சென்று இந்திரன் வழித் தோன்றலாகிய ஆபுத்திரன் ஆளும் நாகநகர் எல்லையில் ஒரு சோலையுள் இறங்கி, அங்கிருந்த மாதவன் அடியிணைகளில் வீழ்ந்து வணங்கி

  • இந்நகரின் பேர் யாது? இந்நகராளும் மன்னவர் யார்?'

என்று கேட்டாள். அம்மாதவரும் அது நாகபுரமென் றும் அந்நகரை ஆளும் மன்னன் பூமிசந்திரன் மகனாகிய புண்ணியராசன் என்றும் கூறி, அவன் பிறந்த நாள் தொட்டு அந்நாட்டு வளம் குறையாது, மழை தவறாது, மண்ணும் வானும் வளம் பிழையாது,உயிர்களும் நோ யில்லாது உயர்ந்துள்ளதையும் எடுத்துரைத்தார். மணி மேகலையும் அவன் புகழ் கேட்டு அச்சோலையில் தங்கி யிருந்தனள். 90 ஆபுத்திரனைக் காணல் மணிமேகலை அச் சோலையில் தங்கியிருந்த அதே வேளையில் ஆபுத்திரனாகிய அந்நாட்டு அரசன் தன் உரிமை மனைவியோடு அப்பொழிலிடைப் புகுந்து ஆண்டு தங்கிய தருமசாவகன் அடியினை வீழ்ந்து வணங்கினான். வணங்கி அறநெறி பற்றியெல்லாம் கேட்டு அறிந்து கொண்டான். பிறகு அவன் அங்கே பக்கத்தில் நின்ற மணிமேகலையைக் கண்டு 'இளமையும் எழிலும் ஒரு சேரப் பொருந்தியும் பிக்குணிக் கோலம் கொண்டு கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திய இவ் விளங்கொடி யார்? என்று கேட்டான். அனைவரும் அறியாது நிற்கின்ற அளவில், அவன் பக்கத்தில் இருந்த சட்டையிட்ட பிரதானி ஒருவன், முன் ஒரு காலத்தில் கிள்ளிவளவனது கேண்மை நாடி காவிரிப்பூம்பட்டி