பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

விட 10–20° அதிகம் இருக்கும். கோடை இங்குக் குறுகிய காலமே நிலவும். பனிக்கட்டியின் மேற்பரப்பு வெப்பநிலை 0° அளவுக்கு மேல் போகாது. பனிக்கட்டி உருகுதலினால் பாசறைக்கட்டடங்கள் பழுதுறாமல் இருக்க, அவை குளிர் பெற்ற வண்ணம் இருக்கும். குளிர் ஊட்டும் வேலையை அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் செய்யும். அவை குளிர்ந்த காற்றைப் பாசறையில் லிருந்து வெளியேற்றும்.

200 அடி ஆழத்திற்கு உண்டாக்கப்பட்ட துளை ஒன்றிலிருந்து ஆற்றல் தரும் எந்திரத்திற்கு வேண்டிய நீரும், பாசறையின் வீட்டுத் தேவை களுக்கு வேண்டிய நீரும் கிடைக்கும்.

பாசறையில் அமைக்கப்பட்ட 30 கட்டடங் களும் பெட்டி போன்றவை. மனிதன் வசதியுடன் வாழ்வதற்கு ஏற்றவை. மின்சாரக் கருவிகள் உள்ளே நிலையாக வெப்பத்தை அளித்த வண்ணம் உள்ளன. ஒளிர் கருவிகள் ஒளியைத் தந்த வண்ணம் உள்ளன. பாசறையின் உயிர்நாடி அணு அற்றல் எந்திரமே.

பயன்கள்

ஆர்க்டிக் பகுதியில் பாசறை அமைத்து அமெரிக்கா திட்டமிட்ட ஆராய்ச்சி நடத்துகிறது. இதனால் சிறந்த பயன்கள் உண்டாகும்.

இங்கு அமைத்த பாசறையை முன் மாதிரியாகக் கொண்டு துருவப் பகுதிகளின் மற்ற இடங்-