பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 தென்பிராந்திய ஜூரம் "என்னை அனுமதியுங்கள்! நான் அந்த ஆளை ஒரு நாயைச் சுடுவதுபோல் சுட்டுத் தள்ளுவேன்...... பாபெஹாக்குப் பிறகு இவன் என்ன மனுஷன்...? சாதாத் துப்பாக்கியும் அவன் தோரணையும்!’’ என்று கூறுவான். ஒரு நாள் நான் சட்டென்று ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். ""நாளை, விடியலுக்கு முன்னே, நான் நாணல் காட்டுக்குப் போகிறேன். நீல நீரூற்றை நான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று சொன்னேன். நாங்கள் மீண்டும் அளிரியன் ஜியார்ஜின் திறந்தவெளி விடுதியில் இருந்தோம். - எவ்விதமான காரணமும் இல்லாமலே எல்லோரும் எழுந்து தின்ருர்கள். அவர்களது விசித்திரக் கண்களை நான் வெகுநேரம் கவனித்தேன். அவர்கள் பார்வை, வழக்கமில்லாத விதத்தில், 'தெற்கத்திய ஜுரம்’ என்று கூறுவதாக எனக்குப் பட்டது. பிறகு, பனிப்படலத்தில் நான் கூர்ஜென்னைப் பார்த்தேன். அவன் தனது கைக்கடியாரத்தைப் பார்த்துவிட்டு வெளி யேறினன். போர் வீரர்களான ரிவே, ஹேரி, பூக் மூவரும் வேறு திசைகளில் போனர்கள். அவர்களில் ஒருவன் தரையில் விழுந்து, சாக்கடையை நோக்கி உருண்டான். அஸிரியன் ஜியார்ஜ் அவனே அருகே இழுத்து, அவன் மண்டைமீது ஒரு குளிர்ந்த துவாலேயைப் போட்டான். மற்றவர்கள் பிரிந்து மறைந் தார்கள். 岑 豪 家 உதயத்திற்கு முன்பே நான் புறப்பட்டேன். இரவில் காற்றே இல்லை. தெற்குப் பிரதேச ஒலியாந்தர் மரங்களின் அகல இலைகள் தளர்ந்து தொங்கிக்கொண்டிருந்தன. வழியில் நான் கிராமவாசிகளைச் சந்தித்தேன். நாங்கள் பேசிளுேம். உலகத்தின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் மேகங்கள் மறைந்து விட்டன. மழையே இல்லை என்றும், பொதுவாக உலகில் என்ன தான் இருக்கிறது என்றும் அவர்கள் அனைவரும் வருத்தப் பட்டார்கள். 'நீங்கள் இந்த ரோடு வழியே எங்கே போகிறீர்கள், ஐயா?” என்று அவர்கள் எல்லோரும் ஒன்ருகக் கேட்டார்கள். இவ்வழியே போய் கீழே இறங்கி நாணல் காட்டுக்குள் போகப் போகிறேன். அங்கே நீலநிற நீரூற்று ஒன்று இருக்கிறது என்று பாபெஹ் சொல்வது வழக்கம். அந்த நீல ஊற்றை நான்