பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3& தென்பிராந்திய ஜூரம் 'வாலி நெற்றியில் குறிவைத்துச் சுடுவதில் கெட்டிக்காரன். இப்போது இது என்ன நிலைமை?” ஒரு நொண்டிப் புவியினல் உண்மையில் என்ன பயன் என்று நானும் எண்ணத் தொடங்கினேன். சந்தேகமின்றி அது இரவில் நாணல் காட்டைவிட்டு வெளிப்பட்டு, மலே விளிம்புகளுக்கு வரவேண்டும். நட்சத்திர ஒளியில்ை போதையுற்று, நகங்கள் நீண்டிருக்கக் கால்களே நீட்டி, ஒளியோடு ஒரு நட்சத்திரத்தை எட்டிப் பிடிப்பதற்காக அது சுற்றித் தாவும். அவ்வளவுதான். அதன் அழிவை நோக்கி மகத்தான வீழ்ச்சி. போ’ என்றது நொண்டிப் புலி, நாங்கள் எல்லையை அடைந்துவிட்டோம். அங்கிருந்து ரஸ்தா ஆரம்பமாயிற்று. நாங்கள் எல்லோரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்: என்று கடமை உணர்வோடு முனகிவிட்டு அது திரும்பி நடந்தது. நான் ரஸ்தாமீது உட்கார்ந்து அதைக் கவனித்தேன். அது சாவகாசமாக நடந்தது. அங்கே நடக்கவேண்டியது எல்லாம் முடிந்திருக்கும் என்ற நிச்சய உணர்வு உடையவர்கள் அப்படித் தான் நடப்பார்கள், ஆனல் நாணல் காட்டுக்குப் போகிற பாதை ஆரம்பிக்கிற சரிவின் ஓரத்தில் அந்த நொண்டிப் புலி நின்றது. அதற்கு ஏதோ தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில், அது திரும்பிப் பார்த்தது. - 'போ’ என்று அது கூறியது. நான் போனேன்.