剑剑 ஒரு சிறுவனும் பெரிய லாரி டிரைவரும் விடுதியின் முன் என் லாரியை நிறுத்தி, கீழே இறங்கி, விடுதியின் முன்னறைக்குள் நான் போன முதல் தடவை, அந்தப் பையன் என்னைச் சந்திக்க வந்தான். புன்முறுவலுடன் கேட்டான் 'நீங்கள் வெகுதொலைவிலிருந்து வருகிறீர்களா?’’ நான் அவனைப் பார்த்துச் சிரித்தேன். வெகு தொலைவு என்று நீ எதைக் குறிப்பிடுகிருய்?’’ சிறுவன் தன் சட்டைப் பையிலிருந்து, கசங்கிய உலகப் படம் ஒன்றை எடுத்தான். மடிப்புகளில் கிழிந்திருந்தது. அதை அவன் மேஜைமீது பரப்பினன். ஒவ்வொரு நகரத்தையும் சுட்டிக் காட்டியவாறு சொன்னன் : லண்டனிலிருந்தா? பாரிஸ்? நியூயார்க்? மாஸ்கோ?’’ நான் அவனே இடைமறித்தேன். உடனே குறுக்கிட்டுச் சொன்னேன்: 'இம்முறை எரவானிலிருந்து.' பையன் படத்தின்மீது மீண்டும் குனிந்தான். 'நான் எரவானைப் பார்த்ததேயில்லை’ என்று வருத்தத் தோடு சொன்னன். அப்போதுதான் அவன் அம்மா அறைக்குள் வந்தாள். 'ஆ! அருமையான விஷயம்! கடைசியாக நமக்கு ஒரு விருந்தாளி வந்துவிட்டார். ஒரு மாதம் முழுவதும் எங்களைத் தேடி ஒருவர்கூட வரவில்லை. என் சின்ன மகன் தனியாகவே பயணம் செய்யவேண்டியதாயிற்று. பிரயாணம் போவது உங்களுக்குப் பிடிக்குமா?’ என்ருள். 'உலகப் படத்திலா?’ என்று நான் கேட்டேன். 'படத்தில் ஏன் கூடாது?’’ உண்மைதான், ஏன் கூடாது என்று நான் நினைத்தேன். ஒருவன் ஏன் உலகப் படத்தில் பிரயாணம் செய்யக்கூடாது என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். நான் அவர்களைப் பார்த்துச் சிரிக்கவில்லை என்று அவர்களுக்கு உறுதி கூற விரும் பினேன். நான் கூற ஆசைப்பட்டது அதுதான். ஆனல், 'நான் பிரயாணம் செய்ய ஆசைப்படுகிறேன். உலகப் படத்திலும்தான்’ என்று சொன்னேன். - . அந்தப் பெண் என்னை நோக்கிச் சிரித்தாள். அவள் அழகாக இருந்தாள்: ஆச்சர்யப்படும்படியான அழகு அவளிடமிருந்தது
பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/120
Appearance