பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 06 பெண்களே, நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்: கேரன் வசந்த காலத்தில் பிறந்தவன். ஏ. .ெ ர விக்கு ம் வசந்தத்தின்போது பிறந்தவள் என்று நான் அறிவேன். அது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனல், அப்படித்தான் இருக்கும் என்று நான் யூகிக்கிறேன். ஏனெனில், வசந்தம், வசந்த காலத்தில்தான் பிறக்க முடியும். இதில் எனக்கு திட நம்பிக்கை உண்டு. - கேரனின் பிறந்த நாளை, கட்டடம் முழுவதுமே கொண் டாடுவது வழக்கம். ஒவ்வொரு பகுதியினரும், அவ் விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகத் தங்கள் பிரதிநிதியை அனுப்பினர்கள். இயல்பாக, ஏரெவிக்தான் அனைவரிலும் மிகுந்த சந்தோஷம் கொண்டிருப்பாள். புறக்கணிக்கப்பட்ட கேரோ தனக்குப் பிடித்த சிரி, கோமாளி, சிரி?’ பாடலைப் பாடியதும், ஏரெவிக்தான் மற்றவர் களைக் காட்டிலும் பலமாகக் கைதட்டினள். பிறகு கேரோ மீண்டும் பாடினன். அவர்கள் ஸ்வாலோப் பறவைகளின் நடனம்’’ என்ற இசையை மீட்டியதும், ஏரெவிக்கைத் தன்னுடன் நடனம் ஆடும்படி கேரோ கேட்டான். மாலே நேரம் முழுவதும் அவர்கள் ஆடினர்கள் . அன்று இரவு கேரோதான் ஏரெவிக்கை வீட்டுக்கு இட்டுச் சென்ருன் என்றும், அவளிடம் தனது காதலை அவன் தெரிவித் தான் என்றும் மறுநாள் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அதை யார் கண்டறிந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆனல் ஒன்று தெளிவாகத் தெரிந்தது. அந்தப் பெண் அவன் பேச்சை அன்புடன் கேட்டுக்கொண்டிருந்தாள்; பிரிந்தபோது, புன்முறுவல் பூத்து, போய் வா, கேரோ-கேனியோ’’ என்ருள். இந்தப் பரபரப்பான செய்தி எங்கள் முற்றத்தில் பல சூடான சர்ச்சைகளையும், அதிகமான விமர்சனங்களையும் உண் டாக்கியது. த்சு, த்சு. அவளும் மற்ற எல்லா அழகான பெண்களையும் போன்றவள்தான் என்ரு சொல்கிறீர்கள்?’ என்று எராநூய் அத்தை அங்கலாய்த்தாள். உரக்கக் கத்தியும் சைகைகள் காட்டியும் இந்த விஷயம் கிழட்டு வானேவுக்கும் புரியவைக்கப்பட்டது. விநோதமாகத் தோன்றலாம், அவர் சிறிதளவுகூட ஆச்சர்யப்படவில்லை. 'அந்தப் பெண் பார்வைக்கு அழகானவள். அவ்வளவு அழகான பெண் ஒருவனுக்கு மட்டும் என்பது அளவுக்கு மீறிய தாகவே இருக்கும்’ என்று அவர் மெதுவாகச் சொன்னர்.