பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகாசி ஐவாசியன் 夏夏莎 கிறேன்; அவர்கள் ஏன் கவனிப்பதில்லை?... நான் எதையும் விரும்பவில்லை... நான் அவர்களுக்கு நல்லதே நினைக்கிறேன். அவர்கள் கவனித்தால் போதும்...”* தான் மறுபடியும் பேசிக்கொண்டிருப்பதை எகோர் உணர்ந் தான். சுற்றிலும் பார்த்தான். துரத்தில் இரண்டு புள்ளிகள் நகர்ந்துகொண்டிருந்தன. முதலில் அவை பறவைகள் போல் தோன்றின. அப்புறம், அவை மெதுவாக அசையவும், ஆடுகள்போல் தெரிந்தன. பிறகு எகோர் சிரமத்தோடு கவனித்து, அவை மனித உருவங்கள் என்று எப்படியோ புரிந்து கொண்டான். ஆனலும், வெகு தொலைவில் இருந்ததால், அவர்கள் குழந்தைகளா, பெரியவர்களா, பெண்களா அல்லது ஆண்களா என்று அவளுல் கண்டுகொள்ள முடியவில்லை. திடீரென்று அருகில் ஆட்கள் பேசுவதை எகோர் கேட்டான். குழப்பமுற்று அவன் சுற்றிலும் பார்த்தான். யாரும் இல்லை. அவர்கள் மறுபடியும் பேசினர்கள். தெளிவாகவும் புரிந்து கொள்ளும் விதத்திலும். எவ்வித முயற்சியும் இல்லாமலே, பேசியவர்களின் தொனியையும், உச்சரிப்பையும், சுவாசத்தையும் கூட அவன் தெரிந்துகொண்டான். ஒருவர் எரெவானிலிருந்து வந்தவர்-ஒரு இளம் பெண்; மற்றவர் ஸான்கிலிரிலிருந்து வந்தவர்-ஆண் என்றும் அவன் முடிவு செய்தான். ஆளுல், குரல்கள் எங்கிருந்து வந்துகொண்டிருந்தன? எகோர் மேலே பார்த்தான், புன்னகைத்தான், கீழே நோக்கினன்: தூரத்தில் தெரிந்த இரண்டு புள்ளிகளின் குரல்களே அவை என்று அவன் நம்பிக்கை இல்லாமலே உணர்ந்தான். அதிசயம், நவீன உத்திகள், வருங்கால மர்மங்கள் பற்றி நினைத்தான். பிறகு, அது ஒரு எளிய விஷயம் என அவன் நினைவுகூர்ந்தான். பார்க்கப் போனல், ஏற்கெனவே எப்போதும் தூரத்துக் குரல்களே அவன் இங்கே கேட்டது உண்டு. அது எப்படி நிகழ்ந்தது என அவன் ஒருபோதும் சிந்தித்ததில்லை. ஆனால் அவற்றை அவன் கேட்டிருந் தான்... தெளிவாகக் காண இயலாத தொலைதுார இடங்களி லிருந்து வந்த குரல்கள் மிக அருகில் கேட்பதாகத் தோன்றின. அதைப்பற்றி எல்லாம் இப்போது அவன் வேறுவிதமாகச் சிந்திக்க லானன். காற்று, தடங்கல் எதுவும் இல்லாதபோது, நல்ல கடத்தி ஆக அமைகிறது. மிகச் சரியாகச் சொன்னல், அது மனிதனின் தொடர்ச்சியாக இருக்கிறது; மறுபடியும் மனிதனுக மாறுகிறது. எகோர் பழங்கால விஷயத்தை நினைவுகூர்ந்தான். (அதை அவன் எப்படி மறக்க முடியும்?) அவன் சின்னப் பையனுக இருந்தபோது, இங்கே வசித்த காலத்தில், அவாக் கிசன்ட்சும் ஹோவன்னஸ் பூமன்ட்சும் ஒரு குகை உச்சியிலிருந்து இன்னொரு