பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ 28 அம்மாவின் வீடு என் அம்மா எங்கே போயிருப்பாள்? அவனுக்குள் ஒருவித எரிச்சல் மூண்டதை அவன் உணர்ந்தான். நீ என் அம்மாவைப் பார்க்கவில்லையா?” இல்லையே. நான் பார்க்கவில்லை. பதப்படுத்தப்பட்ட பீச் பழங்கள், வேறு சில பழங்களே எல்லாம் நான் உனக்கு அனுப்ப விரும்பினேன். உன் விலாசத்தை உன் அம்மா எனக்குத் தரவில்லை, உன் டெலிபோன் நம்பரையும் சொல்லவில்லை. நீ வந்தது நல்லதாயிற்று. நீ அவளை உன்னோடு கூட்டிப்போ...' தன் முன்னே நின்ற அந்த மனிதனைக் கவனமாகவும் நுணுக்க மாகவும் அவன் நோக்கினன். பூமி காய்ந்திருந்தபோதிலும் வெம்மையாக இருந்தது. அந்த ஆளின் பெயரை அவன் தினைவு கூர்ந்தான். அவனேப்பற்றி அவன் மறந்துவிட்டிருந்தான். அவன் பெயர் அர்த்தவாஸ்த். அம்மாவின் அண்டைவீட்டுக்காரன், சிறுவர்களாக இருந்தபோது அவர்கள் ஒன்ருகச் சேர்ந்து பழங்கள் திருடியிருக்கலாம். அவன் கண்களை மூடிக்கொண்டான். அவ்விதம் அவன் பொருள்களை நன்முகப் பார்க்க முடிந்தது. ஏனெனில் அர்த்தவாஸ்தை அவன் பார்க்கவில்லை. 'நான் பழங்களைப் பதப்படுத்தப்போகிறேன். அர்த்த வாஸ்த் சொன்னதை அவன் கேட்டான். என்னிடம் இளம் ஒயினும் இருக்கிறது. சுயம்புவான தேன்கூட, முற்றிலும் நயமானது. நகரத்தில் தேன் சர்க்கரைப் பாகினல் ஆனது. மூளே உள்ள தலைக்கு ஊட்டச்சத்து தேவை. இப்போது மார்கோவைப்பற்றி நீ என்ன சொல்கிருய்? நான் அவளைக் கூப்பிடவா?’’ போ, அர்த்தவாஸ்த். நான் என் அம்மாவுக்காகக் காத்திருப்பேன். பிற்பாடு நானே வருவேன்' என்ருன். கண்களை அவன் திறக்கவேயில்லை. ஆச்சர்யம்தான். அர்த்தவாஸ்த் இணங்கினன். சற்று நேரத்தில் அவன் காலடி ஓசை சிறிது சிறிதாகத் தேய்ந்து போனதை வாகன் கேட்டான். பூச்சிகள் சலிப்புத்தரும் விதத்தில் இரைச்சலிடுவது தவிர வேறு எதுவும் காதில் விழாத முந்திய அமைதி மட்டுமே அவனைச் சுற்றிலும் நிலைத்திருந்தது. 零 察 密 அவன் இரண்டாவது தடவையாகப் பிராந்தி குடித்தான். மூன்று நாட்களுக்கு முன்பு, ஒரு ரணசிகிச்சையின்போது, மூர்ச்சைபோட்டு விழுந்த அவனுடைய மாணவிகளில் ஒருத்தியை நினைத்துக்கொண்டான். அட, இந்தப் பெண் சர்ஜன்கள்!