பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} } {} அம்மாவின் வீடு உற்சாகம் அளிக்கவில்லையே என்று இடைக்கிடை அவன் மனக் கசப்புக் கொள்வான். அவற்றில் பெரும்பாலானவற்றை அவள் அணிந்ததே இல்லை. அவன் அம்மாவுக்காக ஒரு கம்பளிக் கோட்டு வாங்கி வந்தான் . 'நீ ஏன் இதற்கு ஒரு பெரிய பை அளவு பணத்தைக் கொட்டிக் கொடுத்தாய்? அவன் அம்மா முதலில் சந்தோஷப் பட்டாள். ஆனல். பின்னர் அவள் அதிருப்தி கொண்டாள். அந்தக் கம்பளிச் சட்டை ஆடை அலமாரியில் தொங்கியது. எரெவானுக்குப் போகும்போது ஒன்று அல்லது இரண்டு முறை அதை அவள் அணிந்தது உண்டு. கிராமத்தில் கம்பளி அணிய அம்மாவுக்கு மனமில்லை என்று அவன் புரிந்துகொண்டான். ஆனல் பின்னர், அவள் அதைக் காட்டுவதற்காக ஊர் ஜனங்களைத் தன் வீட்டுக்கு அழைத்தாள் எனவும் அவன் தெரிந்துகொண்டான். அப்படி ஒரு மகன் தனக்கு இருந்தது குறித்து அவள் பெருமையாகப் பேசியிருக்கலாம். ஒரே ஒரு தடவை அம்மா அழுது, தனது தலைவிதிபற்றிக் குறைப்பட்டாள். அப்போது அவள் விநோதமான ஒரு செய்தியைச் சொன்னுள்: நான் அடிக்கடி எண்ணிப் பார்க்கிறேன்-கடவுள் என்னைத் தண்டிக்கும்படி நான் என்ன பாபம் செய்தேன்? உன் அப்பா இறந்தார். அப்புறம் உன் அக்கா. பிறகு உன் அண்ணன். நான் மட்டும் ஒரு ஆந்தை மாதிரி இப்படித் தனியாக விடப்பட் டிருக்கிறேன். யுத்த காலத்தில் உன்னை வளர்த்துப் பாதுகாப் பதற்காக, நான் அபரானில் ஒயின் விற்கப் போவது உண்டு. சில சமயம் நான் ஒயினில் தண்ணிர் கலப்பது வழக்கம். அதற்காகத்தான் கடவுள் என்னைத் தண்டித்தாரோ? ஆனால் அது உன் அப்பா செத்த பிறகு நடந்தது. அவர் இருந்தால், என்னை அவர் வீட்டைவிட்டு வெளியே போக விடுவாரா? ஒயின் விற்பது கிடக்கட்டும்!...” போட்டோவில் அப்பா மயிரடர்ந்தவராய், அன்பான வராய்த் தோன்றினர். இவ்வேளையில் அவன் தன் தந்தையைவிட மூன்று வயது மூத்தவன். தன் மகனுக்கு அப்பா பெயரை அவன் வைத்திருக்கிருன். அவன் பெயர் அவனுடைய தாத்தாவின் பெயராகும். ஆகவே, அவன் அப்பா பெயரளவில் உயிரோடு இருந்தார், தந்தை பெயரிலும் தன் பெயரிலும். ஆல்ை ஒரு மகனை அவனது தாத்தாவுடன் பிணைக்கிற பந்தம் எது? எதுவுமேயில்லை. 'என் பெயர் பாச்சா உருண்டை நாறுகிறது’ என்று அவன் ஒரு தடவை சொன்னன். உலகம் நவம் நவமான பெயர்களால் நிறைந்திருக்கிறது. இருந்தாலும், நீ போய்ப் புராதனப் பொருள்கள் விற்கும் கடையிலிருந்து