பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. பெத்ரோசியன் 129 'நல்லது கடவுள் காப்பாராக. இப்போது நான் கிராம சோவியத்துக்கு ஃபோன் பண்ணுவேன். அவளுடன் தொடர்பு கொண்டதும், நீ வந்திருக்கிருய் என்று தெரிவிப்பேன்.” நன்றி.” அவன் கைக்கடியாரத்தைப் பார்த்தான். மூன்று மணி நேரத்தில் அவன் ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டும். அது சாதாரண நாள்தான். விசேஷமாக எதுவும் நிகழவில்லே. இருந்தாலும் அவன் போகவேண்டியது அவசியம். அவன் ரேடியோவை இயக்கினன். அயல்நாட்டுச் செய்திகள் ஒலித்தன. அவன் கவனித்தான். திடீரென்று அவன் தன் அக்காளின் உருவத்தைக் கண்டான். இல்லை. அவன் அக்காளின் உடலே மட்டும்தான்; முகமும் சாயல்களும் இல்லாமல், மவுனமான, பாதுகாப்பு இல்லாத ஒரு உடலை, அவன் தனக்கு முன்னே கண்டான். ரேடியோ உபயோகமற்று இயங்கியது. அவன் தன் அக்காளின் உடலையே கண்டுகொண்டிருந்தான். குளிப்பு அருவியி லிருந்து நீர் கொட்டுவதுபோல், அவன் தலைக்கு மேலாகச் சோகம் கொட்டியது. இப்போது உள்ளார்ந்த இந்தச் சோகம் எப்படி விழித்தெழுந்தது? நினைவுகள் ஏன் திடீரென்று, ஒரு கடியாரத்தின் இயக்கங்கள் போல், அடிக்கத் தொடங்குகின்றன? அவன் அக்காள், தன் முகத்தை இழந்துவிட்டவள், காலத்தின் சோகத்தில் கரைந்துபோளுள். அந்தப் பெண்ணின் பெயரை உச்சரிக்கையில் அது தன் அக்காளின் பெயர் என அவன் ஒருபோதும் எண்ணியதில்லை. தன் அம்மாவை, ஒன்றிரு மாதங்களுக்கு ஒரு தடவைதான் பார்ப்பவளைப் பற்றித்தான் அவன் என்ன அறிவான்? ரணசிகிச்சைக் கத்திபோல் கூர்மை யான எதுவோ அவன் இதயத்தைக் குத்தியது. அவன் தன் அம்மாவின் போட்டோவை நுணுக்கமாய்க் கவனிக்கலாஞன். அவளது இளம் வயதில் எடுக்கப்பெற்ற படம் அது. அப்பாவுடன் சேர்ந்து எரெவானில் எடுத்துக்கொண்டது. அப்பா சவரம் செய்யாத முகத்துடன் காணப்பட்டார். அம்மா சந்தோஷமாக இருந்தாள். அவள் போட்டோவில் மகிழ்ச்சியோ டிருந்தாள். தாய்மார்கள் சந்தோஷமாக இருக்க நேர்வது எப்படி? அவர்கள் சந்தோஷம் இல்லாமல் இருக்க நேர்வதும் எப்படி? அவன் அம்மாவோடு மனம் விட்டுப் பேசிக்கூட வெகு காலம் ஆகியிருந்தது. அவன் பத்துப் பதினைந்து நிமிஷங்கள் தங்குவதற்கு வருவான்; வந்ததுமே கைக்கடியாரத்தைப் பார்ப்பான். அம்மாவுக்குச் சிறிது பணம் கொடுப்பான். எப்பவாவது ஒரு தடவை ஒரு ஜதை காலணிகள் அல்லது உடுப்புகள் கொண்டு வருவான். இந்தப் பொருள்கள் அவளுக்கு ஆ-9