பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அழைப்பு நெய்யப்பட்ட கால்சட்டையும், வெள்ளாட்டு ரோமத்தாலான காலணியும் அணிந்த பையன், ஸோரோ, நீலநிறக் கற்களின் விளிம்பில் நின்று வேகமாய்க் கவண் எறிந்துகொண்டிருந்தான். வீஷ்-வீஷ்-விஷ், சிறு கற்களைப் பள்ளத்தாக்கினுள் வீசிக்கொண் டிருந்தான். சிறிய கற்கள் காய்கறிப் பாத்திகளில் நின்ற சிறுமிகளின் தலைக்கு மேலே இரைந்துகொண்டு சென்றன; பள்ளத்தாக்கினுள் பாய்ந்தன. அதுதான் சுவாரஸ்யமான விஷயம்: கற்கள் பள்ளத்தாக்கை அடையும்வரை ஓசையுடன் வேகமாய்ப் பறந்தன. ஆனால், பள்ளத்தாக்கின் மேலாக வந்ததும் அவற்றின் பாதை தகர்ந்தது. கற்கள், அடிபட்ட காகங்கள்போல் நடுங்கிக்கொண்டு, பள்ளத்தாக்கினுள் வீழ்ந்தன. காய்கறி சேகரிக்கும் பெண்களின் வர்ணமயமான வரிசை மலைச் சரிவின் மேலே வளைந்து வளைந்து ஏறும். அவர்களில் ஒருத்திதான் ஏழு வயதான சின்னஞ்சிறு அலெஹ் மினுமினுக்கும் கரிய விழிகளும், மென்மையான கூந்தலும், வெறும் கால்களும், சிங்காரமான மேல் துணியும் கொண்டிருந்த அலெஹ். உற்சாகத்தால் ஜொலித்த அலெஹ். அவள், அமைதியற்ற சிறு பிராணிபோல், கல்லுக்குக் கல் தாவிக்கொண்டிருந்தாள். அலெஹ்.. அவள் ஒரு பூமாலே தயாரித்து, அதை அணிந்திருந் தாள்... அலெஹ்.. காற்றில் அசைந்தாடும் வண்ண மலர் கதம்பம். சின்னஞ்சிறு அலெஹ்... ஸோரோ எதிர்பாராத விதமாக அவளைக் கண்டு, அவள் தன்னுடைய அலெஹ், வேறு எவருக்கும் உரியவள் அல்ல என உணர்ந்தான். அவள் அவனுடைய அலெஹ். அவ்வளவேதான். இந்த நீல உலகம் அவனுடையது. அந்தத் தெளிவான காலை நேரமும், பட்டுத்திரை போர்த்திய மாருதா மலையும் அவனுடையவை. திராமைர் மடத்தின்மேலே சஞ்சரித்துக் கொண்டிருந்த வெண்மேகத் துணுக்கு அவனுடையது. பாம் பெண நெளிந்து செல்லும் தால்வாரிக் நதியின் நீர்வீழ்ச்சியும் அவனுடையது. கிராமத்துக்கு உயரே படிந்திருந்த புகையும், உயிர்த்துடிப்பு மிக்க அவ் அழகிய குட்டிகளும் ஆடுகளும் அவனுடையவை. சூரியன், வானம், மலர்ந்திருக்கும் கற்கள், அவன் ஏறி நின்று வேகமாகக் கவண் சுழற்ற உதவிய அந்தப் பாறையும், விஷ்-வீஷ்-வீஷ் சத்தமும், வெறிபிடித்த கவனும் அவனுடையவை. அலெஹ்... தலையில் பூமாலை அணிந்து, கல்லுக்குக் கல் தாவிக்கொண்டிருந்த சின்னஞ்சிறு அலெஹ் அவனுடையவள்; வேறு எவருடையவளும் இல்லை; அவனுக்கே உரியவள்.