பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூஷேக் கால்ஷோயன் 麗3 ア பெற்றிருக்கிருய், சகோதரா. நீ நன்முக அனுபவித்து ஆனந்திப் цптиці та і ** இவ் வார்த்தைகளைக் கேட்டதும் கிழவி திரும்பினுள். முதலில் அவள் மிளகை ஒரு சல்லடையில் போட்டுவிட்டு அருகில் வர விரும்பினள். ஆனல், பிறகு, சிவப்புச் சரங்களைக் கையில் வைத்தபடி அவள் அந்நியனை வியப்புடன் பார்த்து நின்ருள். அவள் உன் மனைவியா?’’ "ஆமாம். என் மனைவிதான். அவளுக்கும் உங்கள் ஊர்ப் பக்கம்தான்.” 'அப்படியா? இங்கே வா. இங்கே இப்படி வா, சகோதரி. நாம் அறிமுகம் செய்துகொள்வோம். லோரோ சந்தோஷம் கொண்டான். முதியவள் அழகாகவும் சீராகவும் நடந்து அருகே வந்தாள். புன்முறுவலுடன் கையை நீட்டினள். அவள் கையில் கிடந்த மிளகுச் சரங்கள் சலசலத்தன, தன் ஊர்ப்பக்கமிருந்து வந்த பெரியவரை, கையில் மிளகுச் சரங்களுடன் சந்தித்ததால் அவள் குற்ற உணர்வு அடைந்தாள்.

  • உனக்கு அங்கே எந்த கிராமம், சகோதரி?’’

அவள் பதிலைக் கேட்டதும், தங்கள் மீது கல் எறியப்பட்டதும் ஜனங்கள் குழம்புவதுபோல் ஸோரோ குழப்பம் அடைந்தான். 'ஸாரெகான?’ ஸோரோ சிரமத்துடன் நிமிர்ந்து நின்முன். * லாரெகான்?’’ கிழவி மிக அருகில் நின்றபோதிலும், ஸோரோ வெகு நெருக்கமாகத் தன் முகத்தைக் கொண்டுவந்து, கண்களைக் குறுக்கிக்கொண்டு அவள் கண்களுக்குள் நோக்கினன்... முதிய வளின் கண்கள் சோர்ந்துபோய் சோகத்துடன் இருந்தன. ஆனல் அவற்றின் அடி ஆழத்தில் குறும்புத்தனப் புன்னகை ஒன்றின் பொறிகள் சுடரிட்டன. ஸோரோ தன் தலையைத் தாழ்த்தி அந்த ஸ்திரீயின் கையிலிருந்து தொங்கிய மிளகுச் சரங்களைப் பார்த்தான். பிறகு, தொலை தூரத்திலிருந்து, வெகு வெகு தொலைவிலிருந்து வந்த கோணலான, பாபகரமான, கனலிடும் புன்னகை ஒன்று, சிலந்தி வலையில் சிக்கியதுபோல் அவன் மீசையில் மாட்டிக்கொண்டது. 'அலெஹ்!’ என்று அவன் முணுமுணுத்தான். கிழவிகூடத் தனது பெயரைக் கேட்கவில்லை. அலெஹ் என்று லோரோ முனகினன். நேரே நிமிர்ந்து நின்ருன், (சமீப காலத்தில் தன் தந்தை அப்படி நிமிர்ந்து விறைப்பாக நின்றதை மகன் கண்டதே யில்லை. அவ்வாறு நிமிர்ந்து நின்று, தனக்கு முன்னல் நின்ற