பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五38 அழைப்பு சின்னஞ்சிறு பெண் பிள்ளையின் தலைக்கு மேலாக நோக்கினன். அவன் பார்வை வீடுகளையும் மரங்களையும் ஊடுருவிச் சென்று, தூரத்து மலை விளிம்பின் மீது நிலைத்தது. அவன் நெடிய மூச்சு உயிர்த்து, 'ஹே.. அலே... ஏஹ்...! அலே. ஏஹ்!’ என்று கூப்பிட்டான். தூரத்து மலைகளே நோக்கியவாறு மீண்டும் அழைத்தான் அலே. ஏ. ஏஹ்..!’ முதியவள் அமைதி இழந்து, அரைவாசி மூடிய, பனி படர்ந்த கண்களைத் துரத்தில் பதித்தபடி அவள் பெயரைத் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்த லோரோவை உற்று நோக்கிள்ை. சிறிது நேரத்துக்குப் பிறகு, தன் மங்கிய பார்வையை அவள் பக்கம் திருப்பி அவன் மீண்டும் முணுமுணுத்தான்: 'நான் ஸோரோ அலெஹ்! அவளது உள்ளங்கைகளைத் தன் கைகளில் எடுத்து அழுத்தினன்; அவற்ருல் தன் நெற்றியைத் தொட்டான்; அவற்றைத் தன் உதடுகளுக்குக் கொண்டுபோனன். முதியவள் குழப்பம் அடைந்தாள். அவர்கள் நாட்டின் வழக்கப்படி பெண்கள் ஆண்களின் கைகளைப் பற்றிட வேண்டும். அவள் அவசரமாக ஸோரோவின் கையை முத்தமிட்டாள். இதற்குள் அவளுக்கும் கண்ணிர் பெருகியது. ஓ, நெடுங் காலமாக மறந்திருந்த கண்ணிர். அது ஸோரோவின் கைகள் மீது விழுந்தது. அப்புறம், முத்தமிடுவதற்காக ஒருவர் கையை ஒருவர் பிடிக்க, கிழவியின் கைமீது தொங்கிய மிளகுச் சரங்கள் அவர் களின் முகங்களுக்கும் கண்களுக்கும் அருகே குலுங்கின. அலெஹ் தும்மினுள். அவன் கண்களிலிருந்து கண்ணிர் அமைதியாக வழிந்தது. அழுவதில் அவன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். கண்களைக் கசக்கினன். சூடான, தெளிவான கண்ணிர் அழுக்காகி அவன் இமைகளின் கீழே கசப்பாக மாறியது. எதிர்எதிராக நின்ற இரண்டு குழந்தைகள் உறுத்துகிற கண்களை முஷ்டியால் துடைத்துக்கொண்டு, கலங்கிய கண்களால் ஒருவரை ஒருவர் பார்த்தனர். 'அப்பா, நேரமாகிறது’’ என்று மகன் நினைவுபடுத்தின்ை. ஸோரோ தன்னினைவு பெற்ருன், மகனைப் பார்த்தான். வீட்டுக்காரனைக் கவனித்தான். பிறகு தன் பார்வையை அலெஹ் பக்கம் திருப்பினன். மேலும் கீழுமாய்த் தலையை ஆட்டினன். 'அலெஹ்...” என்று முனகினன். அவன் என்னவோ கூற ஆசைப்பட்டான். ஆனல் மறு படி யும் வீட்டுக்காரனே நோக்கினன்.