பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟盛纷 அழைப்பு 'நான் போதுமான அளவு இதை அனுபவித்தாயிற்று. நீ சம்மதித்தாலும் சம்மதிக்காவிட்டாலும் நான் விவாகரத்து செய்தே தீர்வேன்.' லோரோ சீறிச் சாடினன். கிழவி வியப்போடும் குழப்பத் தோடும் பார்த்துக்கொண்டு நின்ருள். புது வீட்டின் பின்னல் ஒரு குடிசை இருந்தது. அவர்க ளுடைய பழைய வீடு அது. அதன் கதவு ஒரு கம்பியால் பிணைக்கப்பட்டிருந்தது. அதனுள் பழைய சாமான்கள் நிறையக் கிடந்தன. பழைய தொட்டில்கள், துருப்பிடித்த பழைய அடுப்புகள், கலப்பைக் கொழுக்கள், வெட்டரிவாள்கள், கடப் பாறைகள் எல்லாம் இருந்தன. சுமாராக இருந்த ஒரு அடுப்பையும் இரண்டு நாற்காலிகளையும் அவன் தேர்ந் தெடுத்தான். அவற்றை அந்தக் குடிசையில் வைத்துக் கொண்டான். மற்றவற்றை எடுத்துப்போய், குடிசைக்குப் பின்னல் அடுக்கினன். அப்புறம் சுவர்களையும் கூரையையும் சுத்தப்படுத்தினன். கதவைச் செப்பனிட்டான். இதோ! இப்போது அது வசிப்பதற்கு ஏற்றதாகிவிட்டது. மாலையில் மகன்கள் வீட்டில் கூடியபோது, தந்தை ஏற்கெனவே குடிசையில் தனது படுக்கையை அமைத்திருந்தார். அவருடைய தட்டங்கள் சிலவற்றையும், ஒரு சாக்கு மாவையும் அங்கே கொண்டு சேர்த்திருந்தார். தனிக்குடித்தனம் அமைத்துவிட்டு, தந்தை வாசல்படியில் உட்கார்ந்து அமைதியாகப் புகைபிடித்துக் கொண்டிருந்தார். மகன்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள்அப்பாவுக்குக் கோபமூட்டியது யார்? அந்த நிலைமைக்கு விளக்கம் கோரி ஒருவரை ஒருவர் விசாரித்தார்கள். தாயைக் கேள்வி கேட்டார்கள். அப்பாவிடமிருந்தே காரணத்தை அறிய விரும் பிஞர்கள். ஆனல் ஸோரோ சுருக்கமாகச் சொன்னன், என் உள்ளம் இப்படி விரும்புகிறது' என்று. அவர்கள் எவ்வளவோ கெஞ்சியும் அவன் வீட்டுக்குப் போகவில்லை. அவனுடைய இரண்டு மகன்களின் வீடுகளில் வசிக்கவும் விரும்பவில்லை. அவன் பிரிவு உறுதியாகவும் திட்டமானதாகவும் இருந்தது. 4. மறுநாள் மதியவேளையில் ஸோரோ சமவெளி கிராமத்தில் இருந்தான். அலெஹ் வீட்டின் முன்புறம் அவன் மேலும் கீழுமாக நடந்தான். அவளைத் தெருவில் சந்திக்க விரும்பினன். அநேக தடவைகள் அப்படியும் இப்படியும் நடந்த பிறகு, மல்பெரி மரத்தடியில் நின்ருன். மரக்கிளைகளினல் சன்னலை