பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲7 2 ஆகஸ்ட் அவளுக்கு ஒரு தாத்தா இருந்தார். வயது நாற்பதுதான் ஆகியிருந்தது. நாற்பது வயதிலும் ஒரு பெண் பெண்ணுகவே இருப்பாள் என்று கருதப்படுகிருள். ஆனல் அவள் அப்படி இல்லை. அவள் எப்போதும் ஒரு சாக்கு உருளைக்கிழங்குகளின் கீழே, அல்லது ஒரு சுமை விறகுக் கட்டைகளின் அடியில் குனிந் திருப்பாள். அல்லது ஒரு கோடாரியைச் சுமந்துகொண்டிருப்பாள்; அல்லது குழுத் தலைவனுடன் சண்டை போட்டவாறு இருப்பாள். மரியம், என்ன?’ ’ 'உனக்கு என்ன வயது??? - "பதினறு. சின்னஞ்சிறு பெண்.’’ 'இன்னும் நாற்பது ஆகவில்லையா?” 'முப்பத்தாறு. எனக்கு முப்பத்தாறு வயது, ஆண்ட்ரோ, ’’ அவன் நாக்கைக் கொட்டினன். 'பார்த்தால் பதினன்கு வயதுக்கு அதிகமாகத் தோன்றவில்லை.” 'முட்டாள்’ என்று அவள் வருத்தமாகச் சொன்னாள். ‘'நீ ஒரு அடுமடையன். அதுதான் நீ.” - அது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி. ’’ 'என் புருஷன் இறந்தபோது எனக்கு இருபது வயது.” 'மரியம். ' என்ன??? - "நீ இத்தனை காலமும் தனியாகவா இருக்கிருய்??? அவள் பீயர் மரத்தைப் பார்த்தாள். பிறகு தேன்கூடுகளை, அப்புறம் ஆண்ட்ரோவைப் பார்த்தாள். "நீ இன்னும் என்னைப் பார்த்துச் சிரிக்கிருய்.” ஆண்ட்ரோவின் பாதம் கோடாரியுடன் விளையாடிக்கொண் டிருந்தது. "புருஷன் இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருக் கிறதா, மரியம்? நான் நினைப்பது என்னவென்முல்-மரம் வெட் டுவது, அள்ளிப் போடுவது, கடுமையான வேலைகளைக் செய்வது இதை எல்லாம் நான் எண்ணவில்லை. அதை நானே அறிவேன். ஆனல், நான் எண்ணுவது, ஒரு ஆண் இல்லாமல் இருப்பது; அது கஷ்டமாக இருக்கிறதா?” மரியம் அவனை நோக்கிள்ை. அவள் உதடுக்ள் ஒரு மெல்லிய கோடாக இறுகியிருந்தன.